இந்தியாவின் முதன்மையான மஹிந்திரா டிராக்டர் தயாரிப்பாளருடன் குஜராத் அரசு இணைந்து கூட்டாக தொடங்கப்பட்ட மஹிந்திரா குஜராத் டிராக்டர் நிறுவனத்தை குரோமேக்ஸ் அக்ரி எக்கியூப்மென்ட் (Gromax Agri Equipment) என்ற பெயிரில் மாற்றியமைத்துள்ளது.
மஹிந்திரா டிராக்ஸ்டார் டிராக்டர்
குரோமேக்ஸ் கூட்டு நிறுவனத்தில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் 60 சதவீத மூலதனத்தையும், குஜராத் அரசு 40 சதவீத மூலதனத்தையும் கொண்டு செயல்பட்டு வரும் நிலையில் முதல் டிராக்டர் மாடலை 30 முதல் 50 ஹெச்பி பிரிவில் டிராக்ஸ்டார் என்ற பிராண்டு பெயரில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
மஹிந்திரா டிராக்ஸ்டார் பிராண்டில் 31, 36, 40, 45, 50hp என மொத்தம் 5 விதமான குதிரை திறன் பெற்ற டிராக்டர்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. நவீன நுட்பங்களை பெற்றுள்ள இவ்வகை டிராக்டர்கள் சிறப்பான செயல்திறன் மிக்கதாகவும், பல்வேறு விதமான விவசாய பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலும் அமைந்திருக்கும் என குரோமேக்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற 80 சதவிகித டிராக்டர்கள் 30 முதல் 50 ஹெச்பி வரை திறன் பெற்ற மாடல்கள் ஆகும். இந்த டிராக்டர் அடிப்படையில் மஹிந்திரா நிறுவனமும் டிராக்டர்களை வெளியிடும் வாய்ப்புகளும் உள்ளது.
முதற்கட்டமாக செப்டம்பர் மாதம் முதல் உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஒரிசா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் வெளியிடப்பட உள்ள இந்த டிராக்டர்கள், இரண்டாவது கட்டமாக குஜராத், மகாராஷ்டிரா மாநிங்களிலும் மற்ற மாநிலங்களில் அடுத்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.