மாருதி பலேனோ ஆர்எஸ் டீஸர் – முன்பதிவு விபரம்

வருகின்ற மார்ச் 3ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள மாருதி பலேனோ ஆர்எஸ் காரின் டீஸர் வீடியோ ஒன்றினை மாருதி சுசூகி வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 27ந் தேதி முதல் பலேனோஆர்எஸ் காருக்கு ரூ.11,000 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

Maruti Baleno RS 1.0L Boosterjet engine

மாருதி பலேனோ ஆர்எஸ்

விற்பனையில் உள்ள சாதரன மாடலை விட கூடுதலான சக்தியை வெளிப்படுத்தக்கூடிய ஆர்எஸ் காரில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பூஸ்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதன் அதிகபட்ச பவர் 100 ஹெச்பி மற்றும் டார்க் 150 என்எம் ஆக இருக்கும். இதில் பவரை சக்கரங்களுக்கு எடுத்து செல்வதற்கு 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

சாதரன மாடலை விட தோற்ற அமைப்பில் முகப்பில் சிறிய அளவிலான பம்பர் முன்பக்க கிரில் , பின்பக்க பம்பர் போன்றவற்றில் கருப்பு நிறத்தை சார்ந்த நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பக்கவாட்டில் எந்த மாற்றங்களும் இல்லாமல் கருப்பு பூச்சூ கொண்ட புதிய வடிவத்தினை பெற்ற அலாய் சக்கரங்கள் இடம்பெற்றதாக இருக்கும்.

baleno rs

baleno rs side

baleno rs rear

இன்டிரியர் அமைப்பில் கருமை நிறம் சார்ந்ந அம்சத்தினை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற டேஸ்போர்டில் ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைந்த நேவிகேஷன் , ஆப்பிள் கார் பிளே , ஆண்ட்ராய்டு ஆட்டோ , ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார் உள்பட பிரிமியம் இருக்கைகள் , லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி , ஸ்டைலிசான கிளஸ்ட்டரையும் பெற்றிருக்கலாம்.

விற்பனையில் உள்ள மாருதி சுசூகி பலேனோ அமோகமான முன்பதிவுகளை பெற்றுள்ள நிலையில் தற்பொழுது 4 முதல் 6 வாரங்கள் வரை காத்திருப்புகாலம் வேரியன்ட்களை பொருத்து உள்ளதால் புதிய பலேனோ ஆர்எஸ் வருகை முன்பதிவினை மேலும் அதிகரிக்கும் என்பதனால் காத்திருப்பு காலம் மேலும் கூடும் வாய்ப்புகள் உள்ளது.

ஒரே வேரியன்டில் மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்ற மாருதி பலேனோ ஆர்எஸ் விலை ரூ. 8.50 லட்சத்தில் தொடங்கலாம். டீலர்கள் வாயிலாக 27ந் தேதி முதல் ரூ.11,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மாருதி பலேனோ ஆர்எஸ் கார் படங்கள்