Automobile Tamilan
  • செய்திகள்
  • கார்
  • பைக்
  • வணிகம்
  • மோட்டார் ஷோ
  • டிரக்
  • பேருந்து
  • ஆட்டோ டிப்ஸ்
No Result
View All Result
  • செய்திகள்
  • கார்
  • பைக்
  • வணிகம்
  • மோட்டார் ஷோ
  • டிரக்
  • பேருந்து
  • ஆட்டோ டிப்ஸ்
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ரெனோ க்விட் Vs மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் ஒப்பீடு – எந்த கார் வாங்கலாம்

automobiletamilan by automobiletamilan
2019/10/02
in செய்திகள்

 maruti-s-presso-vs-renault-kwid

RELATED POSTS

புதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது

அல்ட்ராஸ் ஐ டர்போ காரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

குறைந்த விலை புதிய டிவிஎஸ் ஜூபிடர் விற்பனைக்கு வெளியானது

2019 ரெனோ க்விட் காரின் 1.0 லிட்டர் மாடல் மற்றும் மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ என இரு மாடல்களும் பல்வேறு வசதிகள் மற்றும் குறைவான விலை கொண்டிருந்தாலும், ரெனோ க்விட் Vs மாருதி எஸ் பிரெஸ்ஸோ என எந்த கார் சிறந்த மாடல் என ஒப்பீட்டு அறிந்து கொள்ளலாம். மேலும் டட்சன் ரெடி-கோ காரும் இந்த இரு மாடல்களுக்கும் போட்டியை ஏற்படுத்துகின்றது.

மூன்று கார்களும் வித்தியாசமான ஸ்டைலிங் அம்சங்களை பெற்றதாகும். குறிப்பாக எஸ் பிரெஸ்ஸோ கார் ஆனது மற்ற இரு கார்களை விட சற்று கூடுதலான உயரம் பெற்று மினி எஸ்யூவி போன்றே காட்சியளிக்கின்றது. இதன் காரணமாக சற்று உயரமான மாடலை போல காட்சியளிக்கின்றது. அதேவளை வீல்பேஸ் பொருத்தவரை அதிகபட்மாக க்விட் கார் கொண்டிருக்கின்ற காரணத்தால் கூடுதலான இடவசதியை வழங்குகின்றது.

ADVERTISEMENT

முன்புற தோற்ற அமைப்பில் எஸ் பிரெஸ்ஸோ மற்றும் ரெடி-கோ மாடல்களை விட க்விட் சற்று கூடுதலான ஸ்டைலிங் அம்சங்களுடன் எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்றிருக்கின்றது. இது மற்ற இரு கார்களை விட சற்று கூடுதலான கவர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

மூன்று கார்களிலும் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரண்டு ஆப்ஷனிலும் கிடைக்க தொடங்கியுள்ளது. கூடுதலாக குறைவான விலை கொண்ட மாடல்களில் ரெடி-கோ மற்றும் க்விட்டில் 0.8 லிட்டர் என்ஜினும் வழங்கப்படுகின்றது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் வழங்கப்பட்டுள்ள என்ஜின் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையானதாக உள்ளது. மற்ற இருமாடல்களும் பிஎஸ் 4 என்ஜினை பெற்றதாகும்.

விவரக்குறிப்புகள் மாருதி எஸ் பிரெஸ்ஸோ ரெனோ க்விட் டட்சன் ரெடி-கோ
Engine 1.0 லிட்டர் 1.0 லிட்டர் 1.0 லிட்டர்
Displacement 999 cc 999 cc 999 cc
Max Power 67 bhp at 5500 rpm 67 bhp at 5500 67 bhp at 5500
Max Torque 90 Nm at 3500 rpm 91 Nm at 4250 rpm 91 Nm at 4250 rpm
Transmission 5 MT / 5 AMT 5 MT / 5 AMT 5 MT / 5 AMT
மைலேஜ் 21.7 Kmpl 21 Kmpl 21 Kmpl

 maruti-s-presso-vs-renault-kwid

இன்டிரியர் அமைப்பின் வசதிகளை பொருத்தவரை எஸ் பிரெஸ்ஸோவின் மாறுபட்ட சென்டரல் கன்சோல் ஸ்டைலிங் கவருகின்றது. இதற்கு இணையாகவே க்விட் கிளைம்பர் விளங்குகின்றது. 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் க்விடில் வழங்கப்பட்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, நேவிகேசன் வசதிகளை பெற்றுள்ளது. எஸ் பிரெஸ்ஸோ மாடலின் டாப் வேரியண்டுகளில் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு நேவிகேஷன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. ரெடி-கோ காரில் 2 டின் ஆடியோ சிஸ்டம் மட்டும் இணைக்கபட்டுள்ளது.

அடிப்படையான பாதுகாப்பு வசதிகள் ஏர்பேக், இபிடி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், கீலெஸ் என்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளது. மற்ற இரு மாடல்களை விட கூடுதலாக ரியர் பார்க்கிங் கேமராவை க்விட் கார் பெற்று அசத்தியுள்ளது.

 maruti-s-presso-vs-renault-kwid

விலை ஒப்பீடு

ரெனோ க்விட் மாடலின் 1.0 லிட்டர் என்ஜின் ஆரம்ப விலை சற்று அதிகமாக தொடங்கினால் கூட டாப் வேரியண்ட் எஸ் பிரெஸ்ஸோ மாடலை விட சற்று குறைவாகவும் அதேநேரம் கூடுதலான வசதிகளை பெற்று க்விட் கார் முன்னிலை வகிக்கின்றது. க்விட் கிளைம்பர் வேரியண்டில் இடம்பெற்றுள்ள ஒரு சில வசதிகள் எஸ் பிரெஸ்ஸோ மாடலில் இல்லை.

மாடல் விலை (ex-showroom, Delhi)
1.0 லிட்டர் என்ஜின்
ரெனோ க்விட் ₹ 4.33 முதல் ₹ 4.84 லட்சம்
டட்சன் ரெடி-கோ ₹ 3.90 முதல் ₹ 4.37 லட்சம்
மாருதி எஸ் பிரெஸ்ஸோ ₹ 3.69 முதல் ₹ 4.91 லட்சம்

 

Tags: Maruti Suzuki S-pressoRenault Kwid
Previous Post

செப்., 2109-யில் 17 % வீழ்ச்சி அடைந்த டொயோட்டா கார் விற்பனை நிலவரம்

Next Post

ஸ்டைலிஷான 2020 யமஹா எம்டி-03 பைக் அறிமுகமானது

Related Posts

Tata safari suv production begins
கார் செய்திகள்

புதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது

by automobiletamilan
2021/01/14
0

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய சஃபாரி எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு ஜனவரி 26ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள...

Read more
tata altroz iturbo
கார் செய்திகள்

அல்ட்ராஸ் ஐ டர்போ காரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

by automobiletamilan
2021/01/13
0

வரும் ஜனவரி 22 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய அல்ட்ராஸ் ஐ டர்போ காரில் இடம்பெற உள்ள 110 ஹெச்பி பவர் இன்ஜினுடன், கூடுதலான...

Read more
tvs jupiter smw scooter
பைக் செய்திகள்

குறைந்த விலை புதிய டிவிஎஸ் ஜூபிடர் விற்பனைக்கு வெளியானது

by automobiletamilan
2021/01/12
0

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஜூபிடர் ஸ்கூட்டரில் குறைவான விலையில் SMW (Sheet Metal Wheel) பெற்ற வேரியன்ட் ரூ.67,420 (எக்ஸ்ஷோரூம் சென்னை) ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது....

Read more
Updated Royal Enfield Himalayan soon
பைக் செய்திகள்

2021 ராயல் என்பீல்ட் ஹிமாலயன் பைக்கின் எதிர்பார்ப்புகள்

by automobiletamilan
2021/01/12
0

நடப்பு ஜனவரி மாதம் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் ஹிமாலயன் அட்வென்ச்சர் ரக பைக்கில் டிரிப்பர் நேவிகேஷன் உட்பட, புதிய நிறங்கள் மற்றும் சிறிய அளவிலான...

Read more
TVS Scooty Pep Mudhal Kadhal Edition
பைக் செய்திகள்

ஸ்கூட்டி பெப்+ முதல் காதல் எடிசனை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

by automobiletamilan
2021/01/11
0

தமிழகத்திற்காக பிரத்தியேகமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டி பெப்+ அடிப்படையிலான முதல் காதல் எடிசன் விலை ரூ.56,085 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாள்...

Read more
royal enfield meteor 350 bike
பைக் செய்திகள்

முதன்முறையாக மீட்டியோர் 350 பைக்கின் விலையை உயர்த்திய ராயல் என்ஃபீல்டு

by automobiletamilan
2021/01/09
0

இந்தியாவின் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் 2021 தொடக்க முதல் விலையை உயர்த்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியான ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மீட்டியோர் 350 விலை அதிகபட்சமாக...

Read more
Leave Comment

Recent Posts

  • புதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது
  • அல்ட்ராஸ் ஐ டர்போ காரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்
  • குறைந்த விலை புதிய டிவிஎஸ் ஜூபிடர் விற்பனைக்கு வெளியானது

Categories

  • Auto Expo 2020
  • Auto Show
  • Bus
  • Car & Bike Videos
  • Car and Bike Photos Tamil
  • Car Reviews
  • EV News
  • TIPS
  • Truck
  • Wired
  • கார் செய்திகள்
  • செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்

© 2021 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home
  • Category
    • Business
    • Culture
    • Economy
    • Lifestyle
    • Health
    • Travel
    • Opinion
    • Politics
    • Tech
    • World
  • Landing Page
  • Buy JNews
  • Support Forum
  • Pre-sale Question
  • Contact Us

© 2021 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Add Automobile Tamilan to your Homescreen!

Add
Go to mobile version