மாருதியின் நெக்ஸா 200வது டீலர் திறப்பு

மாருதி சுஸூகி நிறுவனத்தின் வாடிக்கையார்களுக்கு உயர்தர அனுபவத்தினை வழங்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்ட மாருதியின் நெக்ஸா ஷோரூம் எண்ணிக்கை 200 எட்டியுள்ளது. இந்த நிதி ஆண்டில் 250 நெக்ஸா டீலர்களை மாருதி நியமிக்க திட்டமிட்டுள்ளது.

maruti NEXA dealership

மாருதியின் நெக்ஸா

சமீபத்தில் ஹைத்திராபாத் எல்பி நகரில் (Nexa LB Nagar) கல்யானி மோட்டார்ஸ் டீலர் திறக்கப்பட்டுள்ளது. நெக்ஸா டீலர்கள் வாயிலாக எஸ்-கிராஸ் க்ராஸ்ஓவர் , மாருதி பெலினோ மற்றும் புதிய இக்னிஸ் கார் மாடலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அடுத்த சில வாரங்களில் பெலினோ ஆர்எஸ் மாடலும் விற்பனைக்கு வரவுள்ளது.

கடந்த 18 மாதங்களில் 121 நகரங்களில் 200 டீலர்களை கொண்டு 1,85,000 கார்களை மாருதி விற்பனை செய்துள்ள நிலையில் 20 மாதங்களுக்குள் 2,00,000 கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் 2016-2017 ஆம் நிதி ஆண்டில் நாடு முழுவதும் 250 டீலர்களை அதாவது மார்ச் 2017க்குள் திறக்க உள்ளது.

நெக்ஸா டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்படுகின்ற எஸ் க்ராஸ் மாடலை தவிர்த்து பெலினோ மற்றும் இக்னிஸ் கார்கள் அமோக ஆதரவினை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெற்றுள்ளது. பலேனோ விற்பனைக்கு வந்த சில மாதங்களிலே அமோக முன்பதிவு செய்யப்பட்டு அதிகபட்சமாக 4 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் உள்ளது. இந்த மாத தொடக்க வாரங்களில் விற்பனைக்கு வந்த இக்னிஸ் கார் அமோக வரவேற்புடன் 10,000க்கு மேற்பட்ட முன்பதிவுகளை குவித்துள்ளது.

Maruti S Cross front