Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ரூ. 2,484 கோடி நிகர லாபம் அடைந்த மாருதி சுசூகி – Q2, FY2018

by automobiletamilan
October 28, 2017
in செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

maruti suzuki factoryஇந்தியாவின் முதன்மையான மோட்டார் வாகன தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுஸூகி நிறுவனம் நடப்பு, 2017 – 18ம் நிதி­யாண்­டின், ஜூலை – செப்டம்பர் வரை­யி­லான இரண்­டா­வது காலாண்­டில், ரூபாய் 2,484.3 கோடியாக உயர்ந்­துள்­ளது.

மாருதி சுசூகி நிலவரம் – Q2, FY2018

new maruti dzire

கார் விற்பனையில் தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி பயணித்து வரும் மாருதி இரண்டாவது காலாண்டில் மொத்தம் 492,118 வாகனங்களை விற்பனை செய்து முந்தைய வருடத்தின் இரண்டாவது காலண்டுடன் ஒப்பீடுகையில் 17.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் ஏற்றுமதியான 34,717 வாகனங்களும் அடங்கும்.

சென்ற ஆண்டு இரண்டாம் காலாண்டு இருந்த விற்பனை வருவாய் ரூ. 20,048.60 கோடியாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் அது ரூ. 21,438.10 கோடியாக அதிகரித்தது. நிகர லாபம் 3.4 சதவீதம் அதிகரித்து ரூ.2,484.30 கோடியை நிறுவனம் ஈட்டியுள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு நிறைவில், ஏப்ரல் – செப்., வரையிலான காலகட்டத்தில் மாருதி நிறுவனம் 886,689 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் ஏற்றுமதியான 60,857 வாகனங்களும் அடங்கும்.

மேலும் 2017-2018 நிதியாண்டின் முதல் அரையாண்டு நிறைவில், ஏப்ரல் – செப்., வரையிலான காலகட்டத்தில் மொத்த விற்பனை வருவாய் ரூ.38,570.5 கோடியாக உளளது. முந்தைய ஆண்டின் இதே மாதங்களுடன் ஒப்பீடுகையில் 19.5 சதவீதம் வளர்ச்சி அடைந்து, நிகர லாபம் 3.8 சதவீதம் அதிகரித்து ரூ.4040.70 கோடியை நிறுவனம் ஈட்டியுள்ளது.

maruti suzuki ignis

Tags: Maruti SuzukiMaruti Suzuki Financial Resultsமாருதி கார்மாருதி சுசூகி நிகர லாபம்மாருதி சுஸூகி லாபம்
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan