பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அங்கமாக செயல்படுகின்ற மினி பிராண்டு கார்களுக்கு என பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ள சேவை மையத்தில் அனைத்து விதமான மினி கார்களுக்கான தீர்வுகளும் வழங்கப்பட உள்ளது.

மினி கார் ஷோரூம்

  • ஐரோப்பியா ஒன்றியத்தை தவிர  மினி கார்கள் உற்பத்தி செய்யப்படுவது சென்னையில் மட்டும்தான்.
  • கேயூஎன் எக்ஸ்குளூசிவ் சார்பாக விமான நிலையத்தின் அருகில் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.
  • இந்த மையத்தில் விற்பனை, விற்பனைக்கு பிந்தைய சேவையும் வழங்கப்பட உள்ளது.

டெல்லி ,மும்பை , பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களை தொடர்ந்து ஐந்தாவது டீலராக சென்னை மீனம்பாக்கம் அருகில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த டீலர் வாயிலாக மினி பிராண்டு கார் மாடல்கள் விற்பனை ,  விற்பனைக்கு பிந்தைய சேவை , துனை கருவிகள் மற்றும் மினி நிதி உதவி மூலம் கார் கடன் மற்றும் வாகன காப்பீடு போன்றவை வழங்கப்பட உள்ளது.

பிஎம்டபிள்யூ ஷோரூம் அருகாமையிலே அமைக்கப்பட்டுள்ள மினி ஷோரூம் முகவரி இதோ..

20, ஜிஎஸ்டி ரோடு ,மீனம்பாக்கம் , சென்னை , தமிழ்நாடு ( 20 GST Road, Meenambakkam, Chennai, Tamil Nadu)

இந்திய சந்தையில் மினி பிராண்டில்  3 கதவுகள் கொண்ட மினி கூப்பர், 5 கதவுகள் கொண்ட மினி கூப்பர், மினி கன்வெர்டிபிள், மினி கண்ட்ரிமென் மற்றும் மினி கிளப்மென் என மொத்தம் 5 விதமான வகைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

விற்பனை மையம் திறப்பு விழாக நிகழ்ச்சியில் ம்பங்கேற்று பேசிய பிஎம்டபிள்யூ இந்தியா பிரிவு தலைவர் விக்ரம் பாவா கூறுகையில் ‘சென்னையில் பிஎம்டபிள்யூ கார்களை விற்பனை செய்வதில் நீண்ட நாளைய பங்குதாரராக விளங்குகின்ற கேயூஎன் எக்ஸ்கிள்யூசிவ் நிறுவனத்துடன் இணைந்து மினி ஷோரூம்  தொடங்கியிருப்பது மகிழ்ச்சியை தருவதாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பிஎம்டபிள்யூ குழுமத்தின் கீழ் பிஎம்டபிள்யூ, மினி மற்றும் ரோல்ஸ்-ராய்ஸ் போன்ற பிராண்டுகளில் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 29, மார்ச் 2017 முதல் சென்னையில் அமைந்துள்ள பிஎம்டபிள்யூ ஆலையின் வாயிலாக பிஎம்டபிள்யூ கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. ஐரோப்பியா தவிர முதன்முறையாக மினி பிராண்டு கார்கள் சென்னையில் 2013 ஆம் ஆண்டு முதல் உற்பத்தி செய்யப்படுகின்றது.