டாடா பஸார்ட்,டாடா பஸார்ட் எஸ்யூவி,tata buzzard,tata buzzard suv news in tamil,tata motors

2019 ஜெனீவா மோட்டார் ஷோவில் டாடா மோட்டார்ஸ் 7 இருக்கை பெற்ற டாடா பஸார்ட் (Tata Buzzard) எஸ்யூவி மாடலை காட்சிப்படுத்தியுள்ளது. ஹாரியர் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 7 இருக்கை கொண்ட மிக நவீனத்துவாம வசதிகளை பெற்றதாக பஸார்ட் விளங்கும் என குறிப்பிடபட்டுள்ளது. OMEGA ARC பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்பாரத்தில் ஹாரியர் காரும் வடிவமைக்கப்பட்டதாகும்.

இன்றைக்கு ஜெனீவா மோடடார் ஷோவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அல்ட்ரோஸ், அல்ட்ரோஸ் எலக்ட்ரிக் மற்றும் H2x மைக்ரோ எஸ்யூவி என இரு மாடல் உட்பட பஸார்டையும் காட்சிப்படுத்தியது. இந்தியாவில் இந்த ஆண்டின் இறுதி மாதங்களிஸ் பஸார்டு விற்பனைக்கு வரக்கூடும்.

 டாடா பஸார்ட் எஸ்யூவியின் வசதிகள் என்னென்ன

டாடா ஹாரியர் எஸ்யூவி மாடலானது லேண்ட் ரோவர் டி8 பிளாட்பாரத்தை பின்னணியாக கொண்ட OMEGA ARC பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டது. தற்போது ஜெனீவாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பஸார்ட் மாடலும் அதே பிளாட்பாரத்தில் வீல்பேஸ் மட்டும்  அதிகரிக்கப்பட்டு மூன்றாவது வரிசை இருக்கை கட்டமைக்கப்பட உள்ளது.

இந்த மாடலில் பெரும்பாலான அம்சங்களை ஹாரியர் எஸ்யூவி மாடலில் இருந்து பெற்றிருக்கும். பஸார்ட் எஸ்யூவியின் என்ஜின் ஆப்ஷனில்  170 bhp பவர் மற்றும் 320 Nm டார்க் வழங்குகின்ற 2.0 லிட்டர் Kryotec டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த மாடலில் 6 வேக மேனுவல் அல்லது 6 வேக ஆட்டோமேட்டிக் ஹூண்டாய் நிறுவனத்திடம் இருந்து பெற்று பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த காரில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , 18 அங்குல அலாய் வீல் ஆகியவற்றை பெற்று இந்த ஆண்டின் இறுதி மாதங்களில் விற்பனைக்கு டாடா பஸார்ட் எஸ்யூவி வரக்கூடும்.