சீட் பெல்ட் இருக்கா.., 75 % இந்தியர்கள் சீட்பெல்ட் அணிவதில்லை

கார்களில் பயணிக்கும் நான்கில் ஒருவர் மட்டுமே சீட் பெல்ட்டை அணிகின்றார்கள் எனவும், சீட் பெல்ட் அணியும் 81 % வாகன ஓட்டிகள் போலீசாருக்கு பயந்தே அணிகிறார்கள்.

சீட் பெல்ட்

காற்றுப்பை வாகனத்திற்கு அவசியம் என்றால் இருக்கைப் பட்டை முதல் பாதுகாப்பு அம்சமாகும். பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் ஏர்பேக்கினை SRS என்றே குறிப்பிடுவார்கள், அதாவது ஏர்பேக் என்பது இரண்டாம் கட்ட பாதுகாப்பு அம்சம்தான், ஆனால் முதற்கட்ட பாதுகாப்பு அம்சம் என்றால் இருக்கைப் பட்டை ஆகும்.

Seatbelt Use in India என்ற பெயரில் மாருதி சுஸூகி இந்தியா நிறுவனம் 17 நகரங்களில் 2500 க்கு மேற்பட்ட ஒட்டுநர்கள் வாயிலாக மேற்கொண்ட கணக்கெடுப்பில் 25 சதவித கார் வாகன ஒட்டுநர்கள் மட்டுமே இருக்கைப் பட்டை அணிவதாக தெரிய வந்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டில் வாகன விபத்துகளில் இறந்தவர்களில் 15 பேர் சீட் பெல்ட் அணியாததால் உயிரிழக்க நேர்ந்திருக்கிறது என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி, சீட் பெல்ட் அணிவது விபத்துக்காளால் உயிரிழக்கும் வாய்ப்பை 45 சதவீதம் குறைக்கிறது. மேலும், சீட் பெலட் அணிந்து வாகனம் ஓட்டும் போது நேரும் விபத்துக்களில் பலத்த காயங்கள் ஏற்படுதவற்கான வாய்ப்பும் 50 சதவிதம் குறையும் என முடிவுகள் வாயிலாக தெரிய வந்துள்ளது.

Comments