அசல் டிரைவிங் லைசென்ஸ் கட்டயாம் : தமிழக அரசு

வருகின்ற செப்டம்பர் 1ந் தேதி முதல் அசல் ஒட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டயாமாகும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

டிரைவிங் லைசென்ஸ்

இது குறித்து போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில் விதிமீறல் தொடர்பாக 9,500 லைசென்சுகள் தகுதி நீக்க செய்யப்பட்டுள்ளன. மது அருந்தி வாகனம் ஓட்டியவர்கள், சாலை விதிகளை மீறியவர்கள், இதில் அதிக பாரம் ஏற்றி சென்றவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் அதிகளவில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

வரும் செப்டம்பர் 1 முதல் அசல் டிரைவிங் லைசென்ஸ் ஓட்டுநர்கள் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் சாலை விபத்துகள் குறையும். வாகன விபத்துகளை குறைக்கவும், உயிரிழப்புகளை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் தமிழகத்தில் தான் சிறந்த சாலைகள் உள்ளன. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் சிறந்ததாக உள்ளன.

சிறந்த சாலைகள் இருப்பதால் தான் அதிக விபத்துகள் நிகழ்கின்றன. போக்குவரத்து அமைச்சகத்தின் நடவடிக்கை மூலம் 3,240 விபத்துகள், 309 உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் இறுதிக்குள் சென்னையில் பேட்டரி மூலம் ஓடும் பஸ்கள் இயங்கும்.

Recommended For You