பெட்ரோல் விலை லிட்டருக்கு அதிரடியாக ரூ.2.16 பைசாவும் டீசல் விலை ரூ.2.10 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்னெய் விலை சரிவு டாலருக்கு எதிரான இந்திய கரன்சி மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் விலை குறைக்கப்பட்டுள்ளது.

விலை உயர்வுக்கு விளக்கமளித்துள்ள எண்ணெய் நிறுவனங்கள் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு  உயர்வே விலை குறைப்பிற்கு காரணம் என தெரிவித்துள்ளன.

இந்த விலை குறைப்பு, நள்ளிரவு முதல் 15/05/2017 முதல் அமலுக்கு வந்துள்ளது.. குறைக்கப்பட்ட விலையை தொடர்ந்து, சென்னையில் 71 ரூபாய் 17 காசாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல், தற்போது 68 ரூபாய் 21 காசாக குறைந்துள்ளது.

60 ரூபாய் 71 காசாக இருந்த ஒரு லிட்டர் டீசல், தற்போது 58  ரூபாய் 07 காசுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.