ரெனோ க்விட் 02 அனிவெர்சரி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

0

இந்தியாவின் தொடக்கநிலை கார் சந்தையில் மிக சவாலான மாடலாக விளங்குகின்ற ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் மாடலின் இரண்டு ஆண்டு நிறைவையொட்டி சிறப்பு ரெனோ க்விட் 02 அனிவெர்சரி எடிசன் 0.8 லி மற்றும் 1.0 லி என இரு எஞ்சினிலும் கிடைக்கின்றது.

renault kwid 02 anniversary edition

Google News

ரெனோ க்விட் 02 அனிவெர்சரி எடிசன்

இந்தியாவின் முதன்மையான கார் மாடலாக விளங்கும் மாருதி சுசுகி ஆல்டோ காருக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்திய ரெனால்ட் க்விட் அமோகமான ஆதரவினை பெற்றதை தொடர்ந்து 0.8 லி, 1.0 லி மற்றும் ஏஎம்டி உள்ளிட்ட தேர்வுகளில் கிடைத்து வருகின்றது.

renault kwid 1.0l

சாதாரண RXL மற்றும் RXT வேரியண்டினை பின்னணியாக கொண்டு கூடுதலாக ஸ்போர்ட்டிங் பாடி கிராபிக்ஸ் அம்சத்துடன் , முன்பக்கத்தில் அமைந்துள்ள பானெட்டில் 02 பேட்ஜ் பதிக்கப்பட்டு வெள்ளை மற்றும் சிவப்புநிறங்களில் கிடைக்க உள்ளது.

இரு வண்ண ஓஆர்விஎம் பெற்றதாக வந்துள்ள இந்த சிறப்பு பதிப்பில் 02 பேட்ஜ் பெற்ற அப்ஹோல்ஸ்ட்ரி, இரு வண்ண கியர் ஷிஃப்டர், ஃபுளோர் மேட்ஸ், சிறப்பு ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றை பெற்றதாக கிடைக்கின்றது. எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

KWID SIDE

 

க்விட் எஞ்சின் விபரம்

54பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 799சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டடுள்ளது. ரெனோ க்விட் கார் மைலேஜ் லிட்டருக்கு 25.17கிமீ ஆகும்.

67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட் 1.0லி மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர் ஆகும்.

ரெனோ க்விட் 02 அனிவெர்சரி எடிசன் விலை பட்டியல்

சாதாரன வேரியன்டை விட ரூ. 15,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ள ரெனோ க்விட் 02 விலை பட்டியல் பின்வருமாறு

 வேரியன்ட்  விலை
Kwid RXL 0.8L SCe ரூ. 3,42,800
Kwid RXT 0.8L SCe ரூ.3,76,400
Kwid RXL 1.0L SCe ரூ. 3,64,400
Kwid RXT 1.0L SCe ரூ. 3,97,900

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலை பட்டியல்)