இந்தியாவில் E20 பெட்ரோல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் 2022க்கு முந்தைய பெரும்பாலான தயாரிப்பாளர்களின் வாகனங்கள் ஏற்புடைதல்ல என வெளிப்படையாக உறுதிப்படுத்த முயற்சி செய்த நிலையில் திடீரென எந்த பாதிப்பும் வராது என ARAI ஆய்வை மேற்கோள் காட்டி அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியன் ஆயில் கழகம் மற்றும் மற்றும் இந்திய ஆட்டோமோட்டிவ் ஆராய்ச்சி சங்கம் (ARAI) ஆகியவை பல்வேறு எரிபொருள் சேர்க்கைகளை ஆய்வு செய்த நீடித்து உழைக்கும் தன்மை சோதனையை மேற்கொண்டன. E10 க்கு மட்டுமே சான்றளிக்கப்பட்ட வாகனங்களில் E20 எரிபொருளைப் பயன்படுத்துவதால் எவ்விதமான விளைவுகளும் ஏற்படுவதில்லை என இந்த ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றது.
ஆனால், ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் E10 இணக்கமான எஞ்சின்களில் E20 பெட்ரோலை பயன்படுத்தினால் நிச்சியம் பாதிப்பு வரும் என குறிப்பிட்டுள்ளனர். பயனாளர்கள் பலரும் தங்களுடைய வாகனங்கள் மைலேஜ் 10-20% வரை குறைந்துள்ளதாக வெளிப்படையாக சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், ரெனால்ட் இந்தியா வெளியிட்ட சமீபத்திய அறிக்கை விபரம் பின்வருமாறு ;-
அப்போதைய நடைமுறையில் இருந்த விதிமுறைகளின்படி, கூறப்பட்ட ரெனால்ட் ட்ரைபரின் (மாடல் 2022) வகை ஒப்புதல் மற்றும் உற்பத்தி சோதனைகளுக்கான நோக்கங்களுக்காக E-10 அறிவிக்கப்பட்ட எரிபொருளாக இருந்தது. E10 இணக்கமான கார்கள் குறித்த குறிப்பிட்ட கேள்விக்கு பதிலளிக்க, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) மற்றும் ARAI இணைந்து E10 க்கு சான்றளிக்கப்பட்ட வாகனங்களில் E20 எரிபொருளின் பயன்பாடு உட்பட பல்வேறு எரிபொருள் சேர்க்கைகளை உள்ளடக்கிய கடுமையான ஆயுள் சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் வரைவு அறிக்கை, அனைத்து OEM களுடனும் பகிர்ந்து கொள்ளப்பட்டது (MoPNG கடிதம் எண். P-13045(18)/19/2017-CC(E-13946) இன் படி), தற்போதைய சாலை வாகனங்கள் E20 க்கு இணக்கமானவை என்பதை ஒப்புக்கொண்டு, E10-இணக்கமான வாகனங்களில் E20 எரிபொருளைப் பயன்படுத்துவதால் எந்த பாதகமான தாக்கமும் இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
எத்தனால் 20% கலப்பிற்கு எதிராக ஏற்கனவே இந்தியாவில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.