டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் : நுகர்வோர் நீதிமன்றம்

0

அகமதாபாத் : விளம்பரப்படுத்திய மைலேஜ் வரவில்லை என்பதனால் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரை சரிசெய்து கொடுங்கள் அல்லது திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என அகமதாபாத் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

tvs jupiter brand ambassador

Google News

டிவிஎஸ் ஜூபிடர்

ராஜ்கோட் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில்  ராஜ்காட் பகுதியைச் சேர்ந்த மூத்த குடிமகன் ஒருவர் தொடர்ந்த வழக்கில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜூபிடர் ஸ்கூட்டர் விளம்பரப்படுத்திய மைலேஜ் வரவில்லை என்ற காரணத்தால் ஸ்கூட்டர் விளம்பரப்படுத்தி மைலேஜ் கொடுங்கள் அல்லது திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என தீர்ப்பு வழங்கி உள்ளது.

கடந்த செப்டம்பர் 2014ல் ஜூபிட்டர் ஸ்கூட்டரை ராஜ்காட் பகுதியில் அமைந்துள்ள டீலரிடம் ரூபாய் 52,150 விலையில் குன்வென்ட் மெகத்தா என்பவர் வாங்கியுள்ளார். வாங்கிய பொழுது லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தரும் என விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில் வாங்கிய பின்னர் ஒரு லிட்டருக்கு  விளம்பரப்படுத்திய மைலேஜ் கிடைக்க பெறவில்லை.

tvs jupiter

இது குறித்து பலமுறை சர்வீஸ் மையங்களில் சோதனை செய்த பொழுது அவர் எதிர்பார்த்த விளம்பரப்படுத்திய மைலேஜ் வராத காரணத்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியதன் விளைவாக வாடிக்கையாளருக்கு விளம்பரப்படுத்திய மைலேஜ் நிறுவனம் பெறும் வகையில் ஸ்கூட்டர் ரிப்பேர் செய்து தர வேண்டும் அல்லது வாங்கிய விலையான ரூபாய் 52,150 தொகையுடன் சேர்த்து 9 சதவீத வட்டியுடன் தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் தாக்கல் செய்திருந்த அறிக்கையில் மே 2015ல் மைலேஜ் லிட்டருக்கு 43 கிமீ வந்ததாகவும், அதன்பிறகு மைலேஜ் லிட்டருக்கு 55 கிமீ செப்டம்பர் 2015ல் வந்ததாகவும், இறுதியாக கடந்த மார்ச் 2016 ல் மைலேஜ் லிட்டருக்கு  65.51 கிமீ வந்ததாக குறிப்பிட்டிருந்தது. இதனை திட்டவட்டமாக மறுத்த மெகத்தா இந்த ஸ்கூட்டர் மைலேஜ் சாரசரியாக 45 கிமீ மட்டுமே வந்ததாக தெரிவித்தார்.

tvsjupiter

இருதரப்பு விவாதங்களுக்கு பிறகு, நாடு முழுவதும் நடைபெற்ற இது போன்ற வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாக கொண்டே இந்த தீர்ப்பிலும் வாகனத்தை வாங்கிய விலையை திருப்பி தர வேண்டும் அல்லது கிளைம் செய்த மைலேஜ் பெற்றுத்தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது..

ஏன் நிறுவனங்கள் கிளைம் செய்த மைலேஜ் கிடைப்பதில்லை என அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள பதிவை முழுமையாக படியுங்கள்….

source – et auto

ஏன் இந்த ஏமாற்று வேலை – மைலேஜ் தகவல்