2015 ம் வருடத்தில் இந்திய சாலைகளில் 1.46 லட்சம் நபர்கள் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளதாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை  இனை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சாலை விபத்துகள்

  • 2015ம் ஆண்டில் இந்திய சாலைகளில் 1,46,133 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
  • தேசிய நெடுஞ்சாலைகளில் 51,204 நபர்களும் மாநில நெடுஞ்சாலையில் 40,863 நபர்களும் உயிரிழந்துள்ளனர்.
  • 2014 ஆம் ஆண்டில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 1,39,671 ஆகும்.

கடந்த ஏப்ரல் 3ந் தேதி பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இனை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா கடந்த 2015 ம் ஆண்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ,எக்ஸ்பிரெஸ் வே மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் உள்பட நாட்டில் மொத்தம் 1,46,133 நபர்கள் சாலை விபத்துகளால் பலியாகியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் கடந்த 2014ம் ஆண்டில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 1,39,671 ஆகும் , இதனை விட கூடுதலாகவே 2015ல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலைகள் , எக்ஸ்பிரெஸ் வே போன்றவற்றில் ஏற்பட்ட விபத்துகளால் 51,204 நபர்களும் மாநில நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்துகளில் 40,863 நபர்களும் உயிரிழந்துள்ளனர்.

மது அருந்தி விட்டு வாகனத்தை இயக்குவதே அதிகப்படியான விபத்துகளுக்கு மிக முக்கிய காரணமாக  உள்ளதாக மாண்டாவியா தெரிவித்துள்ளார். மேலும் மாதிலங்களுக்கு நெடுஞ்சாலைகளில் மது விற்பனை செய்யும் மையங்களுக்கு அனுமதியை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலே அதிக விபத்துகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.