டாடா மோட்டார்சின் டிரக் ரேசிங் போட்டியின் 4வது வருட T1 பிரைமா டிரக் பந்தயம் மார்ச் 19ந் தேதி புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற உள்ளது. இந்தியாவில் நடைபெறுகின்ற பிரத்யேக டிரக் ரேசாக டி1 பிரைமா பந்தயம் விளங்குகின்றது.
T1 பிரைமா டிரக்
கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெறுகின்ற இந்த 4வது சீசனை FIA (பெடரேஷன் இன்டர்னேஷனல் de l ‘ஆட்டோமொபைல்) மற்றும் இந்திய மோட்டார் விளையாட்டு கிளப் (FMSCI) இணைந்து டாடா டி1 பிரைமா டிரக் பந்தயத்தினை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த போட்டிகளில் பங்கேற்கும் வகையில் டாடாவின் பிரைமா லாரிகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கும்.
டாடாவின் T1 Racer Program (TRP 2.0) கீழ் 1000த்துக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் இந்தியாவிருந்து வந்துள்ளதாக டாடா தெரிவித்துள்ளது.இவற்றில் இருந்து 10 டிரக் டிரைவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் பங்கேற்கும் வகையிலான பயிற்சினை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது. முதல் இருவருடங்களாக இந்திய டிரைவர்கள் எவரும் பங்கேற்காத நிலையில் இந்திய டிரைவர்களுக்கு சிறப்பு பயற்சியும் வழங்கப்படுவது குறிப்பிடதக்கதாகும்.
வருகின்ற மார்ச் 19ந் தேதி புத் சர்வதேச பந்தய களத்தில் டி1 பிரைமா டிரக்குகள் சீறி பாய உள்ளது. மேலும் விபரங்கள் வரும் இணைந்திருங்கள்..