விற்பனையில் சாதனை படைத்த டாடா ஏஸ் மினி டிரக்

சின்ன யானை என்று அழைக்கப்படுகின்ற டாடா மோட்டார்சின் டாடா ஏஸ் மினி டிரக் 20 லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளாதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

டாடா ஏஸ் மினி டிரக்

இந்தியாவின் முதன்மையான மற்றும் சர்வதேச அளவில் முன்னணி வகிக்கும் டிரக் மற்றும் பஸ் தயாரிப்பாளராக விளங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2005 ஆம் ஆண்டு விற்பனைக்கு வெளியிட்ட டாடா ஏஸ் மினி டிரக், தற்போது இந்தியாவின் சிறிய ரக வர்த்தக வாகனங்கள் பிரிவில் 65 % பங்களிப்பை பெற்று விளங்குகின்றது.

2005 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு மாற்றங்களுடன் 15 மாறுபட்ட வகையில் ஏஸ்,ஜிப், மெகா மற்றும் மின்ட போன்ற மாறுபட்ட வகையில் மிக சிறப்பான எடை தாங்கும் திறன் கொண்டதாகவும், சிறப்பான மைலேஜ் மற்றும் இழுவை திறனுடன் விளங்குகின்றது.

கடந்த 12 ஆண்டுகளாக சந்தையில் மிக சவாலான விலையில் போட்டியாளர்களான அசோக் லேலண்ட் தோஸ்த் மற்றும் மஹிந்திரா ஜீதோ ஆகியவற்றுடன் சந்தையை பகிர்ந்து கொண்டுள்ளது.

Recommended For You