2020 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ள டெஸ்லா மாடல் Y காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் முதல் டீசர் படத்தை டெஸ்லா வெளியிட்டுள்ளது. இந்த கான்செப்ட் மாடல் Y எலக்ட்ரிக் எஸ்யூவி மிக சிறப்பான பேட்டரி ரேஞ்சை கொண்டதாக இருக்கும்.

டெஸ்லா மாடல் Y எஸ்யூவி

முழுமையான ஆட்டோமேட்டிக் மாடலாக வரவுள்ள இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் 3 காரின் அடிப்படை பிளாட்ஃபாரத்தின் கோட்பாடுகளை பெறிருத்தாலும் முற்றிலும் நவீன டிசைனுக்கு ஏற்ற அம்சங்களுடன் சிறப்பானதாகவே வரவுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற டெஸ்லா 2017 பங்குதாரர்கள் சந்திப்பின் பொழுது இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மாடல் y டீசர் படத்தை கவனித்தால் உங்களுக்கே தெரியும் சைட் மிரர் இல்லாமல் காட்சியளிக்கின்றது. எலான் மஸ்க் மாடல் X காரையும் இதே போலவே அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தார் ஆனால் சைட் மிரர் பல்வேறு நாடுகளில் அவசியமான ஒன்று என்பதனால் இதனை அனுமதிக்க மறுக்கவே சைட் மிரர் இணைக்கப்பட்டது. தற்போது மீண்டும் 2019 ஆண்டின் இறுதி அல்லது 2020ல் அறிமுகம் செய்யப்பட உள்ள மாடல் ஒய் எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்படலாம்.