சீனாவில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் இடைவழி உயர்த்தப்பட்ட பேருந்தினை (China Transit Elevated Bus )சோதனை ஓட்டத்தை ஈடுபடுத்தியுள்ளது. உலகில் முதன்முறையாக டிரான்சிட் எலிவேட்டேட் பஸ் சேவையை தொடங்க சீனா திட்டமிட்டுள்ளது.
எதிர்கால போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டு வரும் இடைவழி உயர்த்தப்பட்ட பேருந்துக்கான 300 மீட்டர் தோனை சாலையை அமைத்து முதல் சோதனை ஓட்டத்தை TEB-1 (Transit Elevated Bus – 1) பேருந்தை கொண்டு நிகழ்த்தியுள்ளது.
சீனாவின் டேப்டெக் நிறுவனம் உருவாக்கியுள்ள டிரான்சிட் பேருந்தின் உயரம் 22 மீட்டர் அகலம் 7.8 மீட்டர் மற்றும் உயரம் 2.8 மீட்டர் ஆகும். இருசக்கரங்களுக்கு இடையில் 2 மீட்டர் உயரத்துக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து மேற்பரப்பில் 300 நபர்கள் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 55 இருக்கைகள் மற்றும் 245 நபர்கள் நின்று செல்லாலம். மின்சாரத்தில் இயங்கும் வகையிலான டிரான்சிட் எலிவேட்டேட் பேருந்து ஆகும். இடைவழி உயர்த்தப்பட்ட பகுதியில் கார்கள் பயணிக்கலாம்.
உற்பத்தி நிலை மாடலில் 1200 நபர்கள் வரை பயணிக்க கூடிய வகையில் வடிவமைக்க வாய்ப்புகள் உள்ளது. TEB-1 உச்ச வேகம் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படலாம். முழுமையான பயன்பாட்டுக்கு அடுத்த சில வருடங்களில் வெளிவரலாம். TEB-1 பேருந்து வரும்பட்சத்தில் 40 சாதரன பேருந்துகளுக்கு இனையான பயணிகளை ஏற்றி செல்ல முடியும்.
[youtube https://www.youtube.com/watch?v=lPdl3uxW3aI]