பிஎஸ்-6 மஹிந்திரா ஆல்ஃபா மூன்று சக்கர ஆட்டோ விற்பனைக்கு வந்தது

0

mahindra alfa cargo

மூன்று சக்கர வாகன சந்தையில் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மஹிந்திரா நிறுவனம் பிஎஸ்-6 ஆல்ஃபா பயணிகள் ஆட்டோ ரிக்‌ஷா மற்றும் சரக்கு போக்குவரத்து என இரண்டிலும் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

Google News

இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து மிகவும் தாமதமாக மஹிந்திரா நிறுவனம் தனது மூன்று சக்கர வாகனத்தை கொண்டு வந்துள்ளது. புதிய மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதால் அடுத்த சில மாதங்களில் டாப் 3 இடங்களுக்குள் கைபற்ற திட்டமிட்டுள்ளது. முதலிடத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உள்ளது.

முந்தைய பிஎஸ்-4 மாடலை விட பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற மஹிந்திரா ஆல்ஃபா மாடல் 37 சதவீத கூடுதல் சிசி, 16 சதவீத பவர் மற்றும் 12 சதவீத டார்க் கொண்டதாக வந்துள்ளது. எனவே இப்போது 597.9சிசி வாட்டர் கூல்டு டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 9.4 ஹெச்பி பவர் மற்றும் 23.5 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா ஆல்ஃபா பிஎஸ் 6 பயணிகள் ஆட்டோ ரிக்‌ஷா வேரியண்ட்டில் மைலேஜ் 28.9 கிமீ, அதே நேரத்தில் சரக்கு போக்குவரத்து வேரியண்ட் லிட்டருக்கு 29.4 கிமீ வழங்கும்.

mahindra alfa auto

மஹிந்திரா உதய் திட்டம் என்ற கூடுதல் சலுகைகளை வழங்குவதன் மூலம் உரிமையாளர் ஓட்டுநராக வாடிக்கையாளர் அமைந்தால் 10 லட்சம் ரூபாய் வரை எதிர்பாராத இறப்பு காப்பீடு, பரிந்துரை நன்மைகள், குழந்தை கல்வி உதவித்தொகை மற்றும் பல நன்மைகள் உள்ளன.

 

மஹிந்திரா ஆல்ஃபா மூன்று சக்கர ஆட்டோ விலை விபரம் ?

இரண்டு விதமான பிரிவில் கிடைக்கின்ற மஹிந்திரா ஆல்ஃபா ஆட்டோ ரிக்‌ஷா – ரூ.2.67 லட்சம்
மஹிந்திரா ஆல்ஃபா கார்கோ – ரூ. 2.59 லட்சம்
(விற்பனையக விலை மும்பை)

 

Web title : Mahindra Alfa BS6 Three-Wheeler Launched

For the latest Tamil auto news and Truck News, follow automobiletamilan.com on TwitterFacebook, and subscribe to our YouTube channel.