ஆட்டோ எக்ஸ்போவில் பிஎஸ்6 வாகனங்களை வெளியிட்ட எஸ்எம்எல் இசுசூ

0

sml isuzu hiroi school bus

இந்தியாவின் பழமையான வர்த்தக வாகன தயாரிப்பாளரான எஸ்எம்எல் இசுசூ நிறுவனம் புதிதாக ஹீராய் எனப்படும் பள்ளி மற்றும் பணியாளர்களுக்கான பேருந்து உட்பட டிரக்குகள் என அனைத்தும் பிஎஸ்6 என்ஜின் கொண்டதாக வெளியிட்டுள்ளது.

Google News

புதிதாக எஸ்எம்எல் இசுசூ அறிமுகம் செய்துள்ள ஹீரோய் பேருந்து சுற்றுலா, பள்ளி மற்றும் பணியாளர்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஹிரோய் ஸ்டாஃப் பஸ்சில் அகலமான முன் கதவு, சொகுசு தன்மையான இருக்கை, பாதுகாப்பிற்காக மூன்று புள்ளி சீட் பெல்ட்கள்,  சாய்ந்த புஷ்பேக் இருக்கைகள், சுற்றுப்புற விளக்குகள், யூ.எஸ்.பி போர்ட்கள் மற்றும் மல்டி மீடியா ஆன்-போர்டு பொழுதுபோக்கு அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ஹிரோய் பள்ளி பேருந்து மாடலில் மற்றும் பள்ளி பேருந்துக்கான பாதுகாப்பு விதிமுறைகளுடன் முழுமையாக கடைபிடிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் பள்ளி மேலாண்மை அமைப்பு, ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளுடன் இணைக்கப்பட்ட பஸ்சின் இருப்பிடம் உள்ளிட்ட அனைத்தையும் கண்காணிக்கும் வகையிலான எஸ்எம்எல் கனெக்ட்டிவிட்டி வசதி உள்ளது. மேலும் இந்நிறுவனம், ஜிஎஸ் பஸ் மாடலை காட்சிப்படுத்தியது. பிரபலமான குளோபல் சீரிஸ் பிளாட்பாரத்தில் புதிய உட்புறங்களை பெற்று வந்துள்ளது.

டிரக்குகளை பொறுத்தவரை இந்நிறுவனம் சாம்ராட் ரீஃபர் வேன் மற்றும் சர்தாஜ் எம்எஸ் கண்டெயனர் மாடலை பிஎஸ்6 முறையில் காட்சிப்படுத்தியுள்ளது. ரீஃபர் வேன் மாடல் குளிர்ந்த பொருட்களை எடுத்துச் செல்லவும், சர்தாஜ் எம்எஸ் கண்டெயனர் என இரண்டிலும் டீசல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனுடன், எஸ்எம்எல் சாரதி டெலிமேட்டிக்ஸ் வசதியை பெறுகின்றது.