தமிழகத்தைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஹைபிரிட் ஸ்கூட்டரை தயாரிப்பதற்கான காப்புரிமையை பெற்றுள்ளது. அடுத்த சில ஆண்டுகளுக்குள் டிவிஎஸ் ஹைபிரிட் ஸகூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிவிஎஸ் ஹைபிரிட் ஸ்கூட்டர்

  • கடந்த 2008 ஆம் ஆண்டில் ஹைபிரிட் ஸ்கூட்டருக்கான காப்புரிமை கோரி டிவிஎஸ் விண்ணப்பித்துள்ளது.
  • கடந்த 2010 ஆம் ஆண்டில் டிவிஎஸ் க்யூப் என்ற பெயரில் ஹைபிரிட் ஸ்கூட்டரை காட்சிப்படுத்தியது.
  • தற்பொழுது ஹைபிரிட் ஸ்கூட்டர் நுட்பத்துக்கான காப்புரிமையை பெற்றுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஹைபிரிட் ஸ்கூட்டர் தொடர்பான செயல்பாட்டினை வழங்கும் வகையில் நுட்பம் பெற்ற எஞ்சினுக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்தை தொடர்ந்து தற்பொழுது அதற்கான காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போஅரங்கில் டிவிஎஸ் நிறுவனம் க்யூப் என்ற பெயரிலான ஹைபிரிட் ஸ்கூட்டர் மாடலை ஸ்கூட்டி பெப்+ எஞ்சினை பொருத்தி கூடுதலாக எலக்ட்ரிக் மோட்டார் கொண்டு காட்சிப்படுத்தியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற அடுத்த , 2012 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் அதே டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டரில் புதிய 109.7சிசி எஞ்சினுடன் அறிமுகம் செய்ததை தொடர்ந்து 2014 எக்ஸ்போவில் எலக்ட்ரிக் மோட்டார் பேட்டரி விபரங்களை வெளியிட்டது. அதன்படி 500 Wh மற்றும் 150 Wh பேட்டரியை பெற்றிருக்கும்.

எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் இணைந்து செயல்படும் வகையிலான இந்த ஹைபிரிட் ஸ்கூட்டர் மாடல் அடுத்த சில ஆண்டுகளில் உற்பத்திக்கு வரவாய்ப்புள்ளது. மேலும் டிவிஎஸ் நிறுவனம் இந்தாண்டில் இரண்டு மாடல்களை களமிறக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் ஒன்று டிவிஎஸ் அப்பாச்சி RR 310S மற்றும் ஜூபிடர் மாடலை அடிப்படையாக கொண்ட 125சிசி ஸ்கூட்டராக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.