சென்னையில் டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?

0

tvs iqube electric

பெங்களூருவில் விற்பனைக்கு கிடைக்கின்ற டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது.

ஏத்தர் 450 எக்ஸ், ரிவோல்ட் ஆர்வி400, ஆர்வி300 உட்பட ஹீரோ எலக்ட்ரிக், ஒகினாவா போன்ற நிறுவனங்கள் தங்களுடைய மாடலை விற்பனை செய்து வரும் நிலையில் சென்னையில் அடுத்த டிவிஎஸ் நிறுவனமும் தனது மாடலை கொண்டு வரவுள்ளது. இப்போது பெங்களூருவில் மட்டும் கிடைத்து வருகின்றது.

ஐ-கியூப் எலெகட்ரிக் ஸ்கூட்டரில் 2.25kWh லித்தியம் ஐயன் பேட்டரி பேக் பெற்றுள்ள இந்த மாடலில் பேட்டரி பராமாரிக்கும் சிஸ்டம் இணைக்கப்பட்டு 5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜிங் ஏறும் வகையிலான சாதாரண சார்ஜிங் 5 ஆம்ப் சாக்கெட் வாயிலாக மட்டும் சார்ஜிங் செய்ய இயலும். இந்த ஸ்கூட்டரில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெறவில்லை. டிவிஎஸ் ஐகியூப் ஸ்கூட்டரில் உள்ள 4.4 கிலோ வாட் பவர் வெளிப்படுத்தும் மின்சார மோட்டார், தொடர்ந்து 3 கிலோ வாட் பவர் வெளிப்படுத்துவதுடன் 140 என்எம் டார்க் சக்கரங்களுக்கு வழங்கப்படுகின்றது.

40 கிமீ வேகத்தில் பயணிக்கும் ஈக்கோ மோட் மூலம் 75 கிமீ ரேஞ்சு வழங்குவதுடன், அதிகபட்ச வேகம் மணிக்கு 78 கிமீ வேகத்தில் பயணித்தால் அனேகமாக 55-65 கிமீ ரேஞ்சு வழங்கலாம்.

டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ.1.15 லட்சம் (ஆன்ரோடு பெங்களூரு).