இந்தியாவின் முதன்மையான மாருதி சுசுகி நிறுவனத்தின் நான்கு மாடல்கள் இந்த நிதி வருடத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 4 மாடல்களில் மாருதி டிசையர் சந்தைக்கு வந்துள்ளதால் அடுத்தடுத்து ஸ்விஃப்ட் உள்பட இரண்டு மாடல்கள் வரவுள்ளது.
3 மாருதி கார்கள் – 2018
நடப்பு 2017 -2018 ஆம் நிதி ஆண்டில் மாருதி சுசுகி நிறுவனம் 4 கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரவுள்ள நான்கு கார் மாடல்களில் மாருதி டிஸையர் செடான் கடந்த 16ந் தேதி விற்பனைக்கு வந்துள்ளதால் இன்னுமத் மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2018 மாருதி ஸ்விஃப்ட்
வருகின்ற 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற புதிய தலைமுறை ஸ்விஃப்ட சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் தற்பொழுது விற்பனை செய்யப்பட்டு வரும் மாடலாகும். புதிய டிஸையர் காரில் இடம்பெற்றுள்ள அதே எஞ்சின் ஆப்ஷன்களை புதிய ஸ்விஃப்ட் கார் பெற்றிருக்கும்.
2017 மாருதி எஸ்-க்ராஸ்
நெக்ஸா வழியாக விற்பனையில் உள்ள மாருதி சுசுகி எஸ்-க்ராஸ் க்ராஸ்ஓவர் ரக மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடல் சமீபத்தில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்பட்டு வரும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் இந்த மாடல் வருகின்ற பண்டிகை காலத்திற்கு முன்னதாக வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2017 மாருதி செலிரியோ
இந்தியாவின் முதல் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற மாடலாகவும் மாதம் 8000 கார்களுக்கு மேல் விற்பனை செய்யப்படுகின்ற இரண்டாம் கட்ட ஹேட்ச்பேக் செலிரியோ காரின் மேம்படுத்தபட்ட மாடல் இந்தாண்டின் இறுதிக்குள் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுதவிர, விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் மற்றும் மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் போன்ற மாடல்களின் வருகை குறித்து எந்த அதிகார்வப்பூர்வ தகவலும் வழங்கப்படவில்லை.