டட்சன் ரெடி-கோ 1.0 கார் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

நிசான் குழுமத்தின் பட்ஜெட் பிராண்டான டட்சன் ரெடி-கோ காரில் 1.0 லிட்டர் பொருத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு வரவுள்ளதால் புதிய ரெடி-கோ 1.0 கார் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.

datsun redi go 1.0

டட்சன் ரெடி-கோ 1.0

க்விட் காரின் பிளாட்பாரத்தின் பன்னணியாக கொண்டு வடிவமைக்கப்பட்ட ரெடி-கோ மாடலில் தற்போது 0.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் க்விட் காரை போலவே 1.0 லிட்டர் எஞ்சின் மாடல் ஜூலை மாத இறுதி வாரங்களில் அறிமுகம் செய்யப்படுகின்றது.

datsun redi go 1.0 car

ரெடி-கோ டிசைன்

வெளி தோற்றம் மற்றும் உட்புற அமைப்பு போன்றவற்றில் விற்பனையில் உள்ள மாடலில் இருந்து எந்த மாற்றங்களையும் பெறாமல் பின்புறத்தில் மட்டுமே 1.0 என்ற பேட்ஜை பெற்றுள்ள ரெடி கோ 1.0 மாடலில் இன்டிரியர் அமைப்பிலும் 2டின் ஆடியோ சிஸ்டத்துடன் விற்பனையில் உள்ள மாடலின் வடிவமைப்பையே கொண்டுள்ளது.

அர்பன் க்ராஸ்ஓவர் ரக மாடலாக வலம் வருகின்ற ரெடி-கோ ஹேட்ச்பேக் தாரளமான இடவசதி கொண்டிருப்பதுடன் 222 லிட்டர் கொள்ளவு பெற்ற பூட் உள்ளது. விற்பனையில் உள்ள மாடலை விட சஸ்பென்ஷன் மற்றும் என்விஹெச் போன்றவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

datsun redi go 1.0 dashboard

ரெடி-கோ எஞ்சின்

விற்பனையில் உள்ள 800சிசி என்ஜின் பெற்றுள்ள ரெடி-கோ காரில் ஆற்றல் 54 hp மற்றும் 72 Nm இழுவைதிறனை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்சினை பெற்றுள்ளது.

வரவுள்ள புதிய 1.0 மாடலில் 3 சிலிண்டர் பெற்ற 999சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபடசமாக 68 hp பவரை 5,500rpm சுழற்சியில் வெளிப்படுத்துவதுடன், 91 Nm டார்கினை 4250 rpm வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

வசதிகள்

T(O) மற்றும் S ஆகிய இரு விதமான வேரியண்டில் கிடைக்க உள்ள இந்த மாடலில் எஸ் வேரியண்டில் மட்டும் ஒட்டுநர் பக்க காற்றுப்பை வழங்கப்பட்டுள்ளது. 2 டின் ஆடியோ சிஸ்டத்தை கொண்டுள்ளதை தவிர கருப்பு வண்ண இன்டிரியர், பவர் ஸ்டீயரிங் , ஏசி போன்றவற்றை கொண்டுள்ளது.

datsun redigo rear

விலை

விற்பனையில் உள்ள ரெடி-கோ 800சிசி மாடலை விட ரூ.45,000 வரை கூடுதலான விலையை பெற்று ரூ. 4.10 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 800சிசி ரெடி-கோ ரூ. 2.41 லட்சம் முதல் ரூ. 3.63 லட்சம் வரையிலான விற்பனை செய்யப்படுகின்றது.