இத்தாலியில் நடைபெற உள்ள மூஜெலோ மோட்டோ GP பந்தயத்தில் பங்கேற்பதற்காக பயற்சியில் ஈடுபட்டு வந்த பொழுது வாலண்டினோ ரோஸ்ஸி விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் மார்பு மற்றும் வயிற்றுபகுதியில் லேசான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

வாலண்டினோ ரோஸ்ஸி

பிரபலமான யமஹா மோட்டோ ஜிபி ரைடர் வாலண்டினோ ரோஸ்ஸி ஜூன் மாதம் இத்தாலியில் நடைபெற உள்ள  மூஜெலோ மோட்டோ GP பந்தயத்திற்கான பயற்சி போட்டிகளில் பங்கேற்று வந்த நிலையில் நேற்று விபத்தில் சிக்கியுள்ளார்.

விபத்தில் சிக்கியதில் வயறு மற்றும் மார்பு பகுதியில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பெரிய அளவில் எவ்விதமான காயங்களும் இல்லாமல் தப்பியுள்ளார். ஒரு இரவு மருத்துவமனை கண்கானிப்பில் இருந்த ரோசி தற்போது வீடு திரும்பியுள்ளார். வருகின்ற பந்தயத்தில் பங்கேற்பாரா என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமெரிக்காவைச் சேர்ந்த திக்கி ஹேடன் எனும் மோட்டோஜிபி வீரர் இத்தாலி நாட்டில் சைக்கிளிங் சென்று கொண்டிருந்த பொழுது விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடதக்கதாகும். இவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.