உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் குழுமம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மோயா (MOIA) என்ற பெயரில் புதிய நிறுவனத்தை ரைட்ஷேரிங் எனப்படும் கார் பகிர்தல் மற்றும் எதிர்கால மொபிலிட்டி சேவைகளுக்கு அறிமுகம் செய்துள்ளது.
ஃபோக்ஸ்வேகன் குழமத்தின் 13வது பிராண்டாக உருவாக்கப்பட்டுள்ள மோயாவில் எதிர்கால உலகின் ஆட்டோமொபைல் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான மொபிலிட்டி சேவைகளை வழங்கும் வகையில் அதாவது கார்பூலிங் எனப்படும் ரைட்ஷேரிங் சேவைகள் அதனை சார்ந்த நுட்பங்களை சிறப்பு பயன்பாடு எலக்ட்ரிக் வாகனங்களை வடிவமைத்து வழங்க திட்டமிட்டுள்ளது.
MOIA பிராண்டு பெயர் விளக்கம்
ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரை தலைமையிடமாக கொண்டு சேவையை தொடங்க உள்ள ஃபோக்ஸ்வேகன் மோயா பெயர் விளக்கம் என்னவென்றால் சமஸ்கிருத வாரத்தையான மாயா என்பதில் இருந்து உருவான மோயா ஆனது ஃபோக்ஸ்வேகன பெயரில் வரும் ஆங்கில எழுத்துக்களான V W என்பதனை தலைகீழாக போட்டால் வருகின்ற M A என்பதனை கொண்டு நடுவில் 0 1 என்கின்ற எண்ணை சேர்த்துள்ளதாக மோயா தலைமை செயல் அதிகாரி ஓலே ஹார்ம்ஸ் விளக்கம் கொடுத்துள்ளார்.
சிறப்பு பயன்பாட்டு மின்சார வாகனங்களை தயாரிப்பதன் வாயிலாக ரைட்ஷேரிங் நுட்பத்தினை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு மிக சிறப்பான சேவையை உலக அளவில் வழங்கும் நோக்கில் திட்டமிட்டுள்ளது.
மிகவும் மலிவான விலையில் வழங்கப்பட உள்ள இந்த சேவையில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஸ்மார்ட்போன் வாயிலாக முன்பதிவு செய்யும் பொழுது வாகனங்கள் மிக எளிதாக அவர்கள் பயன்பாடுக்கு கிடைக்கும். மோயா நிறுவனத்தின் இந்த சேவை முதற்கட்டமாக அடுத்த ஆண்டின் மத்தியில் ஐரோப்பிவின் இரு முக்கிய நகரங்களில் திறக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து மின்சார வாகனங்களுக்கு முழுமையாக பல்வேறு நகரங்களுக்கு விரிவுப்படுத்த உள்ளது. வருகின்ற 2025 ஆம் ஆண்டுக்குள் உலகின் முன்னனி ரைட்ஷேரிங் சேவையை வழங்கும் நிறுவனமாக விளங்கும் வகையில் தன்னுடைய செயல்திறனை வழங்க உள்ளது.