வோல்வோ கார்கள் நிறுவன சிஇஓ ஹாகான் சாமுல்ஸ்ஸன் உடன் செய்து கொண்ட ஒப்பத்தை அடுத்த இரண்டு ஆண்டுகள் நீடிக்கப்பட்டுள்ளதாக வால்வோ கார்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் இணைந்த சாமுல்ஸ்ஸன், நிறுவனத்தின் மேம்பாட்டு பணிகளை முக்கிய பங்கு வகித்து வந்தார். புதிய பிளாட்பார்மில், பவர்டிரெயின் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய பிரிமியம் கார்கள் அறிமுகம் செய்து போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டிகளை உருவாக்கியுள்ளார்.
அவரது பணிகாலத்தை நீடித்திருப்பது, நிறுவனத்தின் முடிவாகும். இதன் மூலம் சர்வதேச உலகளாவிய மற்றும் பல்வேறுபட்ட இயக்கம் சேவை வழங்குபவராக அவரை மாற்றுவதே நிறுவனத்தின் நோக்கமாக இருக்கலாம் என்று தெரிகிறது.
தனது பதவி கால நீடிப்பு குறித்து பேசிய சாமுல்ஸ்ஸன், முன்னணி நிறுவனத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இதை உத்வேகத்துடன் அடுத்த இரண்டு ஆண்டுகள் பணியாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
வோல்வோ நிறுவனம் அடுத்த பத்தாண்டுகளில் 5 மில்லியன வாடிக்கையாளர்களை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.