இந்தியாவில் மின்சார பைக்குகளை களமிறக்கும் யமஹா

0

2015 Yamaha PED2இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களை களமிறக்கும் திட்டத்தை செயற்படுத்த யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

யமஹா எலெக்ட்ரிக் பைக்

2015 Yamaha PED2 Concept

Google News

இந்தியாவில் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு ஆராய்ந்து வருவதனால், மோட்டார் வாகன தயாரிப்பாளர்களும் மின்சாரத்தில் இயங்கும் நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு முதலீடு செய்யும் திட்டங்களை அதிகரித்து வருகின்றன.

எக்கனாமிக்ஸ் ஆட்டோ இதழுக்கு யமஹா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அளித்துள்ள பேட்டியில் நாங்கள் மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனனங்களை செயற்படுத்த தொடங்கியுள்ள நிலையில், இதனை இந்திய சந்தைக்கும் கொண்டு வருவது எங்களுக்கு கடினமாக இருக்காது என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான ஆய்வுகளை மேற்கொண்டுள்ள யமஹா நிறுவனம் முழுமையான ஐசி எஞ்சின்களுக்கு மாற்றாக இந்திய சந்தையில் மின்சார வாகனங்கள் அமையாது என கருதுவதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, தொடர்ந்து ஐசி எஞ்சின்களை விற்பனை செய்யவும், கூடுதலாக மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக யமஹா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுமையான மின்சார வாகனங்களுக்கு மாறும் வகையிலான திட்டத்தை மத்திய அரசு செயற்படுத்த தொடங்கியுள்ளது.

Yamaha PES2