யமஹா R15 பைக்கை யமஹா R6 பைக்காக மாற்ற ரூ.20,000

0

சர்வதேச அளவில் சில நாடுகளில் ஆர்6 பைக்கின் டிசைன் அடிப்படையில் யமஹா ஆர்15 பைக்கின் மேப்படுத்தப்பட்ட புதிய மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில் இந்தியாவில் பழைய மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

yamaha r15 customise

Google News

 யமஹா R15 கஸ்டமைஸ்

பிரபலமான ஆட்டோமொபைல் கஸ்டமைஸ் நிறுவனமான ஆட்டோலாக் ரூ.2000 மதிப்பிலான கஸ்டமைஸ் கிட்களை வழங்கி மிக நேர்த்தியாக ஆர்6 பைக்கிற்கு இணையான தோற்ற பொலிவினை பெற வழி வகுக்கின்றது.

இந்த நிறுவனம் குறிப்பட்ட பாகங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள விலை பட்டியலின் அடிப்படையில் வழங்குகின்றது.

  • டேங்க் கவர் : ரூ. 5,000
  • ஹெட்லேம்ப் கிட் : ரூ 6,500
  • டெயில் கிட் : ரூ. 8,000

yamaha r15 bodykit

150சிசி சந்தையில் முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடலாக வலம் வருகின்ற யமஹா ஆர்15 மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் ரக பைக்காக விளங்கி வருகின்றது. சமீபத்தில் இந்தோனசியா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய யமஹா R15 v3.0 பைக் மிக நேர்த்தியான இரட்டை பிரிவு முகப்பு விளக்குடன் கம்பீரமாக காட்சியளிப்பதுடன் உலகின் அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் 150சிசி பைக் மாடலாக விளங்குகின்றது என்பது இங்கே குறிப்பிடதக்கதாகும்.

yamaha r15 body

வாசகர்களே..! மேலும் யமஹா ஆர்15 கஸ்டமைஸ் பற்றி கலந்துரையாடலை மேற்கொள்ள உங்கள் பைக் கஸ்டமைஸ் பற்றி படங்களுடன் பதிவு செய்ய கஸ்டமைஸ் கிட வாங்க முகவரி போன்றவற்றை பெற நமது மோட்டார் டாக்கீஸ் பகுதியை பயன்படுத்துங்கள்..முகவரி http://bit.ly/motortalkies