Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

யமஹாவின் FZ-X க்ரோம் எடிசன் வாங்கினால் வாட்ச் இலவசம்

by MR.Durai
7 February 2024, 2:26 pm
in Bike News
0
ShareTweetSend

yamaha fz- x chrome

யமஹா இந்தியா விற்பனை செயது வருகின்ற நியோ ரெட்ரோ ஸ்டைலை பெற்ற FZ-X பைக்கில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள க்ரோம் எடிசன் விலை ரூ.1.41 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு சலுகையாக ஆன்லைனில் வாங்கும் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு கேசியோ G-shock கைக்கடிகாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான நிறங்களை ஜனவரி மாதம் வெளியிட்டிருந்த யமஹா நிறுவனம் க்ரோம் நிறத்தை ஏற்கனவே உறுதி செய்திருந்தது.

2024 Yamaha FZ-X chrome

என்ஜின் ஆப்ஷன் மற்றும் மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் வந்துள்ள க்ரோம் FZ-X 150cc பைக்கில் 149cc SOHC, 2-வால்வு, ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு 149cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 12.4PS பவரை 7,250 rpm-ல் வழங்கும் நிலையில் 5,500 rpm-ல் 13.3 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற பைக்கில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் அப்சார்பர் பெற்றுள்ள மாடலில் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொண்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ், மற்றும் Traction Control System உள்ளது. முன்புறத்தில் 282mm டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 220mm டிஸ்க் பிரேக் கொண்டுள்ளது.

யமஹா FZ-X பைக்கில் நெக்ட்டிவ் எல்சிடி டிஸ்பிளே கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு யமஹா Y-Connect ஆப் மூலம் ப்ளூடூத் வாயிலாக ஸ்மார்ட்போனை இணைக்கும் பொழுது அழைப்பு, எஸ்எம்எஸ் & மின்னஞ்சல் எச்சரிக்கை, போன் பேட்டரி இருப்பு உள்ளிட்ட அம்சங்ளுடன் பல்வேறு தகவல்களை ஆப் மூலமாக பெறலாம்.

நியோ ரெட்ரோ ஸ்டைங் வடிவமைப்பினை கொண்டுள்ள யமஹா FZ-X பைக்கில் வட்ட வடிவ எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட்டுடன் ரன்னிங் விளக்குகள் மற்றும் எல்இடி டர்ன் இன்டிகேட்டரும் இடம்பெற்றுள்ளது. இந்த மாடலில் புதிய க்ரோம் நிறத்தை தவிர மேட் ப்ளூ, மேட் காப்பர், மற்றும் மேட் டைட்டன் ஆகியவற்றிலும் கிடைக்கின்றது.

ஒரு சில நிறங்களில் கோல்டன் நிறத்திலான அலாய் வீல் பெறுகின்ற இந்த பைக் மாடலில் க்ரோம் டேங்க், ஹெட்லைட் ரிங் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் க்ரோம் பூச்சூ உள்ளது.

குறிப்பாக யமஹாவின் ஆன்லைன் விற்பனை பிரிவில் வாங்கும் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு கேசியோ G-Shock கைக்கடிகாரத்தை இலவசமாக வழங்குவதனை தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

2024 யமஹா FZ-X பைக்கின் க்ரோம் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,41,439 ஆக உள்ளது. அதாவது மற்ற மேட் க்ரீன் நிறத்தை விட ரூ.2,500 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது. யமஹாவின் FZ-X பைக்கின் தமிழ்நாட்டின் ஆன் ரோடு ரூ.1.61 முதல் ரூ.1.66 லட்சம் வரை கிடைக்கின்றது.

இந்த பைக்கிற்கு போட்டியாக சந்தையில் கவாஸாகி W175 உள்ள நிலையில் மற்ற போட்டியாளர்களாக ரோனின் 225 மற்றும் ஹண்டர் 350 பைக்குகளும் உள்ளன.

Related Motor News

ரூ.1.52 லட்சத்தில் FZ-X மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை வெளியிட்ட யமஹா

யமஹா 150cc பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல்

2024 யமஹா FZ-X பைக்கின் சிறப்புகள் மற்றும் ஆன் ரோடு விலை

புதிய நிறத்தில் 2024 யமஹா FZ-X விற்பனைக்கு வெளியானது

2024 கவாஸாகி W175 Vs போட்டியாளர்கள் என்ஜின், ஆன்-ரோடு விலை ஒப்பீடு

யமஹா 150cc பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல்

Tags: Yamaha FZ-X
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Honda CBR1000RR-R Fireblade SP

ரூ.28.99 லட்சத்தில் 2025 ஹோண்டா CBR1000RR-R Fireblade SP அறிமுகமானது

2025 bmw s 1000 r

ரூ.19.90 லட்சத்தில் பிஎம்டபிள்யூ S 1000 R பைக் விற்பனைக்கு வந்தது

ரூ.1.96 லட்சத்தில் 2025 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 அறிமுகமானது

நியோ ரெட்ரோ யமஹா XSR 155 நவம்பர் 11ல் அறிமுகம்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டின் 350cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலைப்பட்டியல்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டு 450cc, 650cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலை உயர்வு..!

ரூ.97,436 விலையில் டிவிஎஸ் ஜூபிடர் 110ல் ஸ்பெஷல் எடிசன் வெளியானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V விற்பனைக்கு அறிமுகமானது

20 ஆண்டுகளை கொண்டாட சிறப்பு டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan