Site icon Automobile Tamilan

20 இலட்சம் டிரக் உற்பத்தியை கடந்த டாடா ஜெம்ஷெட்பூர் ஆலை

டாடா நிறுவனம் இந்தியாவின் முதன்மையான வர்த்தக வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமாகும். 1945 ஆம் ஆண்டில் ஜெம்ஷெட்பூர் ஆலையில் ஸ்டீம் லோக்கோமோட்டிவ் தயாரிப்பு தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு முதல் வர்த்தக வாகனங்களின் உற்பத்தினை தொடங்கியது.
Tata Motors jamshedpur trucks

கடந்த 59 ஆண்டுகளில் 20 இலட்சம் டிரக்களை தயாரித்துள்ளது. நேற்று (19.02.2013) 20 இலட்ச வாகனங்களை கடந்தது. இந்த 20 இலட்சம் டிரக் ஆனது ஜெம்ஷட்பூர் ஆலையில் மட்டும். உலகயரங்கில் வர்த்தக வாகன உற்பத்தியில் நான்காம் இடத்தில் டாடா மோட்டார்ஸ் உள்ளது.

ஜெம்ஷட்பூர் ஆலையில் மல்டி ஆக்‌ஸ்ல் டிரக்,டிப்பர்கள், டிராக்டர் -டரைலர், சிறப்பு பயன்பாட்டு வாகனங்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் டிரக்கள் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக சார்க் நாடுகள்,ரஷ்யா, தென் ஆப்பரிக்கா,மியான்மர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள்.

கடந்த 10 வருடங்களில் தான் அதிகப்படியான அதிநவீன மாற்றங்களை ஜெம்ஷெட்பூர் ஆலையில் புகுத்தியுள்ளனர். 5 நிமிடத்திற்க்கு ஒரு டிரக் தயாராகின்றது. ஒரு நாளைக்கு 200 எஞ்சின்கள் வரை தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலையில் பல அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.

உலகில் உள்ள தரமான ஃபவுன்டரிகளில் இந்த ஆலையில் உள்ள ஃபவுன்டரியும் ஒன்றாகும். ஆட்டோமேட்டிக் பெயின்ட் ஷாப்,3டி டிரக் தோற்றம் பார்க்கும் வசதி   என பல்வேறு விதமான நவீன நுட்பங்கள் இந்த ஆலையில் உள்ளன.

Exit mobile version