மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக செயல்படும் மஹிந்திரா எலக்ட்ரிக் மின்வாகன தயாரிப்பு பிரிவு பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக இரண்டு மூன்று சக்கர வாகனத்தை மஹிந்திரா டிரியோ மற்றும் டிரியோ யாரி என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

வாகனங்கள் வெளியிடும் புகையினால் மிகுந்த அளவில் சுற்றுச்சூழல் பாதிப்படைவதனால், சர்வதேச அளவில் மின் வாகனங்களுக்கு என பிரத்தியேக வரைமுறையை சர்வதேச நாடுகள் செயல்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் மின் வாகன தயாரிப்பிற்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளதால் இருசக்கர வாகனம், கார்கள் மற்றும் பேருந்துகளை தொடர்ந்து தற்போது மூன்று சக்கர வாகனங்களை மின்சாரத்தில் இயங்கும் வகையில், முதற்கட்டமாக பெங்களூருவில் மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள மஹிந்திரா டிரியோ மற்றும் டிரியோ யாரி மின்சார ஆட்டோவிற்கு மத்திய அரசின் FAME மானியம் வழங்கப்படுவதனால் டிரியோ யாரி விலை ரூ.1.36 லட்சத்திலும் மற்றும் உயர் ரக டிரியோ மாடல் ரூ. 2.22 லட்சம் விலையில் வெளியிடப்பட்டு டிரியோ ஆட்டோ வகையில் சாதாரன மேற்கூறை மற்றும் கடின மேற்கூறை என இரண்டிலும் வழங்கப்பட்டுள்ளது.

டிரியோ மின் ஆட்டோ ஓட்டுநருடன் 3 இருக்கைகளை பெற்று 7.47 kW லித்தியம் ஐயன் பேட்டரி கொண்டு அதிகட்சமாக முழுமையான மூன்று மணி நேரம் 50 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும், 5.4 kW மற்றும் 30 என்எம் டார்க் வழங்கும் வகையிலான இந்த பேட்டரி அதிகபட்சமாக 130 கிமீ தொலைவை வெளிப்படுத்தும் இந்த ஆட்டோவின் அதிகபட்ச வேகம் மணிக்கு 45 கிமீ வேகத்தில் பயணிக்க இயலும்.

டிரியோ யாரி மின் ஆட்டோ ஓட்டுநருடன் 4 இருக்கைகளை பெற்று 3.69 kW லித்தியம் ஐயன் பேட்டரி கொண்டு அதிகட்சமாக முழுமையான இரண்டு மணி நேரம் 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும், 2 kW மற்றும் 17.5 என்எம் டார்க் வழங்கும் வகையிலான இந்த பேட்டரி அதிகபட்சமாக 80 கிமீ தொலைவை வெளிப்படுத்தும் இந்த ஆட்டோவின் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணிக்க இயலும்.

முதலில் மஹிந்திரா டிரியோ பெங்களூரிலும் அதைத் தொடர்ந்து சென்னை, ஹைதராபாத், தில்லி, மும்பை ஆகிய நகரங்களில் மின் ஆட்டோவை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.