ரூபாய் 4.40 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மஹிந்திரா சுப்ரோ VX மினி டிரக்கில் பல்வேறு கூடுதல் வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு இன்டர்சிட்டி மற்றும் இன்டராசிட்டி கார்கோ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வெளிவந்துள்ளது.
இலகுரக வர்த்தக வாகன பிரிவில் அமோகமான வரவேற்பினை பெற்றுள்ள சுப்ரோ மினி டிரக்கில் புதிதாக வந்துள்ள VX வேரியண்டில் 13 அங்குல வீல், கிரவுண்ட் கிளியரண்ஸ் அதிகரிக்கப்பட்டு 170 மிமீ வரை வழங்குவதுடன், அதிகபட்சமாக 900 கிலோ சுமை தாங்கும் திறனை பெற்றதாக வந்துள்ளது.
புதிய சுப்ரோ விஎக்ஸ் மினி டிரக்கில் மஹிந்திராவின் சக்திவாய்ந்த 909 சிசி 2 சிலிண்டர் DI இன்ஜின் ஆகும். 25 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 55 என்எம் டார்க்கை வழங்குகின்றது. 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் பொருத்தப்பட்டுள்ளது. சுப்ரோ லிட்டருக்கு 24 கி.மீ மைலேஜ் தரவல்லதாகும். அதிக எடை பளுவை தாங்கும் கையாள முன் மற்றும் பின்புறம் லீஃப் ஸ்பீரிங் பெற்றதாக வந்துள்ளது. பாதுகாப்பு சலுகைகளைப் பொறுத்தவரை, இந்த மாடலில் மேம்பட்ட பிரேக்கிங் மற்றும் சிறந்த நிலைத்தன்மைக்கு ELR சீட் பெல்ட்கள் மற்றும் LSVP உடன் புதிய எக்ஸ் ஸ்பிளிட் பிரேக்குகளுடன் வருகிறது.
புதிய மஹிந்திரா சுப்ரோ விஎக்ஸ் அறிமுகம் குறித்து பேசிய மஹிந்திரா, சிறு வணிக வாகனங்களின் வணிகத் தலைவர் சதிந்தர் சிங் பஜ்வா, “சுப்ரோ பிராண்ட் சிறந்த மைலேஜ், சிறந்த சக்தி, சிறந்த சுமை தாங்கும் திறன் மற்றும் அதிக வாடிக்கையாளர்களுக்கு அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த திறனை வழங்க உள்ளது. எங்கள் வாடிக்கையாளரின் மாறிவரும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதற்கான எங்கள் முயற்சியாக எப்போதும் இருக்கிறோம்.