இலகுரக வர்த்தக வாகன பிரிவில் செயல்டும் பியாஜியோ நிறுவனம் வாட்டர் கூல்டு என்ஜின் பெற்ற அபே Xtra LDX ஆட்டோ மற்றும் பயணிகளுக்கு அபே ஆட்டோ DX என இரு மாடல்களும் முதன்முறையாக குஜராத் மாநிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் பியாஜியோ நிறுவனம் மூன்று சக்கர வாகன சந்தையில் மிக சிறப்பான சந்தை மதிப்பை பெற்றுள்ளது. இந்தியாவில் 25 லட்சத்துக்கு அதிகமான மூன்று சக்கர ஆட்டோ மாடல்களை விற்பனை செய்துள்ளது. இந்நிலையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வாட்டர் கூல்டு என்ஜின் கொண்ட இரு மாடல்களில் 8 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 435சிசி என்ஜின் இடம்பெற்றிருக்கும்.
முதற்கட்டமாக குஜராத் மாநிலத்தில் வெளியிடபட்டுள்ள இந்த மாடல்களில் அபே Xtra LDX மூன்று சக்கர ஆட்டோ மாடல் 560 கிலோ எடை தாங்கும் திறன் கொண்டதாக அமைந்திருக்கின்றது. வாட்டர் கூல்டு என்ஜின் சிறப்பான மைலேஜ் , செயல்திறன் , குறைந்த பராமரிப்பு செலவை பெற்றதாக விளங்குகின்றது. மேலும் கூடுதல் தேர்வாக சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
பியாஜியோ அபே லோடு ஆட்டோ விலை
பியாஜியோ அபே Xtra LDX (+ CNG Water Cooled PU) ரூ. 2.17 லட்சம்
பியாஜியோ அபே LDX CNG Water Cooled PU ரூ. 2.13 லட்சம்
பியாஜியோ அபே ஆட்டோ விலை
அபே ஆட்டோ DX (CNG Water Cooled) – ரூ 2.18 லட்சம்
(எக்ஸ்-ஷோரூம் அகமதாபாத்)
முதற்கட்டமாக குஜராத் மாநிலத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய அபே வரிசை படிப்படியாக மற்ற மாநிலங்களில் வெளியிடப்பட உள்ளது.