கோவையை தலைமையிடமாக கொண்ட முன்னணி கிரஷர் தயாரிப்பாளரான புரோபெல் இன்டஸ்டீரிஸ் வெளியிட்டுள்ள புதிய எலக்ட்ரிக் 45 CED டம்ப் டிரக் மாடல் 2023 எக்ஸ்கான் அரங்கில் காட்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
45 டன் மற்றும் 60 டன் எடை பிரிவில் வெளியிடப்பட்டுள்ள புரோபெல் டிம்ப் டிரக் மாடலில் 160 முதல் 450 கிலோவாட் ஹவர் லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
Propel 45 CED EV Dump Truck
470 MEV மற்றும் 470 HEV ஆகிய இரண்டு வேரியண்டுகளில் முறையே 45 மற்றும் 60 டன் மொத்த வாகன எடையுடன், இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் EV டம்ப் டிரக் உற்பத்தியாளராக புரோபெல் நிறுவனம் விளங்குகின்றது.
அதிகபட்சமாக மணிக்கு 40 கிமீ வேகம் என நிர்ணயம் செய்யப்பட்டு 6 முதல் 12 மணி நேரம் வரை தொடர்ந்து இயக்கும் வகையிலான பேட்டரி திறனை கொண்டுள்ள மாடலின் இயக்க நேரம் சுமை உள்ளிட்ட பல்வேறு அடிப்படையான காரணிகளை கொண்டு மாறுபடலாம். மிக விரைவான சார்ஜிங் கொண்டு 0-100% பெற 1 மணிநேரத்தில் சார்ஜ் ஆகும்.
5 வருடம் அல்லது 4000 சார்ஜிங் சைக்கிள் முறைக்கு வாரண்டி வழங்குகின்ற இந்நிறுவனம் மிக சிறப்பான செயல்திறனுடன் பேலோடு அறிதல், டிரைவர் சோர்வு எச்சரிக்கை, தானியங்கி ஹெட்லேம்ப் டிப்பர் மற்றும் பாதுகாப்பிற்காக விபத்து கண்டறிதல். HVAC கூல் கேபின், ஏர்-சஸ்பெண்ட் கேபின், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆன் போர்டு கண்டறிதல் வசதி. தீவிர சாலை மற்றும் பேலோட் நிலைமைகளுக்கு ஏற்ப சேஸ் வவூட்டப்பட்டுள்ளது.
தற்பொழுது இந்த மாடல் அடிப்படையான ஒப்புதலுக்கு காத்திருப்பதனால் விரைவில் பல்வேறு மாறுபட்ட பிரிவில் டம்ப் டிரக்குளை எலக்ட்ரிக் வாகன சந்தையில் புரோபெல் இன்டஸ்ட்ரீஸ் வெளியிட உள்ளது.