இலகு ரக வர்த்தக வாகன பிரிவில் இந்தியாவின் முதன்மையான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ரூ.3.75 லட்சத்தில் புதிய டாடா ஏஸ் கோல்டு மினி டிரக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏஸ் வரிசையில் பிரிமியம் அம்சங்களை பெற்றதாக கிடைக்க தொடங்கியுள்ளது.
டாடா ஏஸ் கோல்டு மினி டிரக்
2005 ஆம் ஆண்டு சின்ன யானை என்ற பெயருடன் களமிறங்கிய டாடா ஏஸ், இந்தியாவின் 68 சதவீத இலகுரக வர்த்தக வாகன சந்தையை தனது கட்டுபாட்டில் வைத்திருப்பதுடன், 20 லட்சத்துக்கு அதிகமான வாகனங்கள் சாலையில் இயங்கி வருகின்றது. டாடா நிறுவனத்தின் ஏஸ் பிளாட் பாரத்தில் சுமார் 15 மாடல்கள் வெவ்வேறு விதமான பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக சரக்கு வாகனங்களாக மட்டுமல்லாமல் பயணிகளுக்கு ஏற்ற வகையிலும் விற்பனை செய்யப்படுகின்றது.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள டாடா ஏஸ் கோல்டு விற்பனையில் உள்ள மாடல்களை விட கூடுதலான அம்சங்களை பெற்றதாக அமைந்துள்ள இந்த வேரியன்டில் மிக சிறப்பான இழுவைத் திறனுடன் கூடிய எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையிலான 702 cc DI டீசல் IDI இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் சிறிய ரக வர்த்தக வாகன பிரிவில் 68 சதவீத பங்களிப்பை கொண்டு விளங்கும் இந்நிறுவனம் 13 ஆண்டுகளில் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான ஏஸ் டிரக்கினை விற்பனை செய்து சாதனை படைத்திருப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு மிக லாபகரமான டிரக் மாடலாக விளங்குகின்றது.
நாடு முழுவதும் டாடா மோட்டார்சின் வர்த்தக வாகன பிரிவு 1800 க்கு அதிகமான சர்வீஸ் மையங்களை அதாவது ஒவ்வொரு 62 கிமீ ஒரு சர்வீஸ் மையத்தை நிறுவியுள்ளது. டாடா ஏஸ் கோல்டு மாடலுக்கு மதிப்பு கூட்டப்பட்ட சலுகையாக இலவச வாகன காப்பீடு, 24×7 பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ் மற்றும் சிறப்பான முறையிலான ரீப்பேரிங் ஆகியவற்றை வழங்க உள்ளது.