இலகுரக வரத்தக வாகன சந்தையில் டாடாவின் ஏஸ் டிரக்கிற்கு அடுத்தப்பபடியாக புதிய டாடா இன்ட்ரா டிரக் மே 22 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. பிஎஸ் 6 என்ஜின் கொண்ட இந்த டிரக்கின் பேலோடு 1100 கிலோ கிராம் ஆகும்.
டாடா மோட்டார்ஸ் இலகுரக டிரக் மாடல் பிரிவில் ஏஸ் முதன்மையாக விளங்கும் நிலையில் ஜிப் முதல் ஏஸ் வரையிலான டிரக்குகள் 0.6 டன் முதல் 1 டன் வரையிலான பிரிவில் விற்பனை செய்யப்படுகின்றது. டாடா 207 மற்றும் ஏஸ் என இரு மாடல்களுக்கு இடையில் இன்ட்ரா நிலை நிறுத்தப்பட உள்ளது.
டாடா இன்ட்ரா காம்பேக்ட் டிரக்
புதிய டாடா இன்ட்ரா டிரக்கில் புதிய பாரத் ஸ்டேஜ் VI (பிஎஸ் -6) தயாராக 1.4 லிட்டர் (DI) டீசல் இயந்திரம் மூலம் இயக்கப்படுகிறது. 1396 சிசி இயந்திரம் 69 bhp @ 4000 rpm பவரையும், மற்றும் 140 nm @ 1800-3000 rpm டார்க் உருவாக்குகிறது. 5-வேக கியர்பாக்ஸ் கேபிள் ஷிப்ட் வசதியுடன் பொருத்தப்பட்டுள்ளது.
இன்ட்ரா டிரக் அளவுகளில் 4316 மிமீ நீளமும், 1639 மிமீ அகலமும், 1919 மிமீ உயரமும் கொண்டுள்ளது. 1100 கிலோ எடை தாங்கும் திறனுடன் வந்துள்ள இந்த டிரக்கில் 2512 மிமீ, 1602 மிமீ அகலமும் மற்றும் 463 மிமீ உயரமும் கொண்டதாக அமைந்துள்ளது.
முன்புறத்தில் மிக நேர்த்தியான கிரில் அமைப்புடன் வந்துள்ள இன்ட்ரா டிரக்கில் வழங்கப்பட்டுள்ள மொபைல் சார்ஜிங் போர்ட், பவர் ஸ்டீயரிங், எலக்ட்ரானிக் கன்ட்ரோல் மற்றும் கூடுதலாக ஆப்ஷனல் ஏசி வழங்கப்பட்டுள்ளது. 14 அங்குல வீல் கொண்டு இந்த மாடலில் கியர் ஷிஃப்ட் அட்வைசர் வழங்கப்பட்டுள்ளது. இந்த கியர் அட்வைசர் (Gear Shift Advisor ) ஆனது சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்க உதவுகின்றது.
இன்ட்ரா டிரக்கின் போட்டியாளராக அசோக் லேலண்ட் தோஸ்த், பியாஜியோ போர்டர், மற்றும் மஹிந்திரா சுப்ரோ மேக்ஸி டிரக் போன்றவற்றுக்கு சவாலாக அமைய உள்ளது. இன்ட்ரா டிரக் விலை ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் விலைக்குள் அமைந்திருக்கும்.