டாட்டா மோட்டார் நிறுவனத்தின் புதிய இன்ட்ரா டிரக் மாடலில் பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற்ற இந்தியாவின் முதல் காம்பேக்ட் ரக டிரக் மாடலாக விளங்குகின்றது.
இந்தியாவின் முதன்மையான வர்த்தக வாகன தயாரிப்பாளரின் புதிய இன்ட்ரா டிரக்கில் இரு விதமான என்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. 800சிசி குறைந்த விலை வி10 டிரக் 1000 கிலோ சுமை தாங்குவதுடன், 1.4 லிட்டர் பெற்ற வி20 டிரக் 1100 கிலோ சுமை தாங்கும் திறனையும் பெற்றுள்ளது.
டாட்டா இன்ட்ரா டிரக் சிறப்புகள்
சிறிய ரக வர்த்தக வாகனங்களில் முன்னணி வகிக்கும் டாடா ஏஸ் டிரக்குகளை தொடர்ந்து ஏஸ் மெகா எக்ஸ்எல் மாடலுக்கு மேலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கார்களுக்கு இணையான தோற்ற அமைப்பு மற்றும் இன்டிரியரில் சிறப்பான வசதிகளை கொண்டிருக்கின்றது.
என்ஜின்
இன்ட்ரா V20 டாப் வேரியன்டில் 1.4 லிட்டர் (DI) நான்கு சிலிண்டர் பிஎஸ் 6 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்ட டீசல் இயந்திரம் மூலம் இயக்கப்படுகிறது. 1396 சிசி இயந்திரம் 52 kW (70 hp) at 4000 rpm பவரையும், மற்றும் 140 NM at 1800-3000 rpm டார்க் உருவாக்குகிறது. 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கேபிள் ஷிப்ட் வசதியுடன் பொருத்தப்பட்டுள்ளது.
அடுத்தப்படியாக குறைந்த விலை டாட்டா இன்ட்ரா V10 டிரக்கில் 0.8 லி என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. 800 சிசி இயந்திரம் 32 kW (40 HP) at 3750 rpm பவரையும், மற்றும் 90 NM at 1750 – 2500 rpm டார்க் உருவாக்குகிறது. 4-வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
வசதிகள்
கார்களுக்கு இணையான தோற்றம் மற்றும் இன்டிரியரை பெற்றுள்ள இந்த டிரக்கில் குறிப்பாக பவர் ஸ்டீயரிங், எலக்ட்ரானிக் கன்ட்ரோல் மற்றும் கூடுதலாக ஆப்ஷனல் ஏசி, மொபைல் சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அம்சங்களுடன் 14 அங்குல வீல், கியர் ஷிஃப்ட் அட்வைசர் (Gear Shift Advisor ) ஆனது சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் நுட்பமாகும்.
சுமை தாங்கும் திறன்
முன்புறத்தில் 6 பட்டைகள் கொண்டு பின்புறத்தில் 7 பட்டை கொண்ட லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷனை பெற்றுள்ள இரு வேரியன்டுகளிலும் 4316 மிமீ நீளமும், 1639 மிமீ அகலமும், 1919 மிமீ உயரமும் கொண்டுள்ளது. 1100 மற்றும் 1000 (வி10) கிலோ எடை தாங்கும் திறனுடன் வந்துள்ள இந்த டிரக்கில் 2512 மிமீ, 1602 மிமீ அகலமும் மற்றும் 463 மிமீ உயரமும் கொண்ட பே லோடு பாக்ஸ் உள்ளது.
1.1 டன் சுமை தாங்கும் திறனுடன் இன்ட்ரா வி20 வாகனத்தின் மொத்த எடை தாங்கும் திறன் 2.3 டன் (2300 GVW) ஆகும். 1 டன் சுமை தாங்குவதுடன் வி10 வாகனத்தின் மொத்த எடை தாங்கும் திறன் 2.1 டன் (2110 GVW) ஆகும்.
போட்டியாளர்கள்
டாட்டாவின் இன்ட்ரா டிரக் அசோக் லேலண்ட் தோஸ்த், பியாஜியோ போர்டர், மற்றும் மஹிந்திரா சுப்ரோ மேக்ஸி டிரக் போன்றவற்றுக்கு சவாலாக விளங்குகின்றது.
விலை பட்டியல்
டாட்டா இன்ட்ரா V20 விலை ரூ.5.85 லட்சம்
டாட்டா இன்ட்ரா V10 விலை ரூ.5.35 லட்சம்
(எக்ஸ்-ஷோரூம் இந்தியா)