கடந்த 2019 ஆண்டு இந்தியாவில் நுழைந்த SAIC குழுமத்தின் எம்ஜி மோட்டார் இந்தியாவின் முதல் இணைய எஸ்யூவி என அறிமுகப்படுத்திய ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் ஆகியவற்றுடன் ஆஸ்டர் எஸ்யூவிகளுக்கு சிறப்பு 6வது வருட கொண்டாட்ட சலுகைகளை அறிவித்துள்ளது.
தற்பொழுது ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி என செயல்படுகின்ற இந்நிறுவனம் எலக்ட்ரிக் வாகன சந்தையில் சிறப்பான பங்களிப்பினை பெற்றிருக்கின்றது.
குறிப்பாக, சிறப்பு சலுகையாக எம்ஜி ஹெக்டர் மற்றும் 6, 7 இருக்கை பெற்ற ஹெக்டர் பிளஸ் கார்களுக்கு ரூ.31,000 முதல் அதிகபட்சமாக ஒரு சில வேரியண்டுகளுக்கு ரூ.2.30 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் தள்ளுபடியை குறிப்பிட்ட காலத்துக்கு வேரியண்ட் கையிருப்பினை அடிப்படையாக கொண்டு சலுகையை அறிவித்துள்ளது.
மேலும், ஹெக்டர் ஷார்ப் ப்ரோ எம்டி இப்போது ₹19.59 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) கிடைக்கிறது, மேலும் எம்ஜி ஆஸ்டர் ₹9.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது, இது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. நிதியாளரின் விருப்பத்திற்கு உட்பட்டு, நிறுவனம் 100% ஆன்-ரோடு நிதி மற்றும் EMI விடுமுறை விருப்பங்களையும் வழங்குகிறது.
இரண்டு வாகனங்களும் இந்திய சாலைகளில் 8 பில்லியன் கிலோமீட்டருக்கும் அதிகமான ஓட்டங்களைப் பதிவு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
எம்ஜி மோட்டார் இந்தியா என்பது SAIC மோட்டார் மற்றும் JSW குழுமத்தின் கூட்டு முயற்சியாகும், குஜராத்தின் ஹலோலில் உள்ள அதன் உற்பத்தி ஆலை, ஆண்டுதோறும் 1,00,000 யூனிட்டுகளுக்கு மேல் உற்பத்தி திறன் கொண்டது மற்றும் சுமார் 6,000 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளது.