மினி பிராண்டின் வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக அறியப்படுகின்ற ஜான் கூப்பர் வொர்க்ஸ் கன்ட்ரிமேன் ஆல்4 (John Cooper Works Countryman All4) அதிகபட்சமாக 300 hp பவர் மற்றும் 400 Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் ட்வீன் பவர் டர்போ பெட்ரோல் என்ஜினை கொண்டு அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ ஆக உள்ள நிலையில் 7 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸூடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை கொண்டுள்ளது.
மினி JCW கன்ட்ரிமேன் All4 சிறப்புகள்
அறிமுக சலுகை விலை
MINI John Cooper Works Countryman All4 – INR 64, 90, 000
வெளிப்புற தோற்ற அமைப்பில் கருமை நிற கிரில் மற்றும் திருத்தப்பட்ட முன் பம்பருக்கு செக்கர்டு வடிவமைப்பினை பெற்றதாகவும், மிக நேர்த்தியான வகையில் அமைந்துள்ள நிலையில், குறிப்பாக சில இடங்களில் சிவப்பு நிறம் சேர்க்கப்பட்டுள்ளதால் கூடுதல் கவனத்தை பெறும் வகையிலான பிரேக் காலிப்பர்கள் மற்றும் கூரை உட்பட ஸ்போர்ட்டி சிவப்பு பெற்றதாகவும், 19 அங்குல அலாய் வீல் கூடுதல் கவனத்தை பெறுகின்றது.
பிரிட்டிஷ் ரேசிங் கிரீன், லெஜண்ட் கிரே மற்றும் மிட்நைட் பிளாக் என மூன்று நிறங்களை பெற்று மேற்கூரை மற்றும் இறக்கை கண்ணாடிகள் சிவப்பு அல்லது கருப்பு நிறத்தில் கிடைக்க உள்ளது.
உட்புறத்தில் 9.4-இன்ச் வட்ட வடிவ OLED இன்ஃபோடெயின்மென்ட் தொடுதிரை JCW-க்கு குறிப்பிட்ட கிராபிக்ஸ் பெற்று மின்னணு முறையில் சரிசெய்யக்கூடிய JCW ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், வெசின்/கார்டு கலவை JCW பிளாக் அப்ஹோல்ஸ்டரி மற்றும் JCW டேஷ்போர்டு டிரிம். அலுமினியத்தில் JCW துடுப்புகளுடன் கூடிய JCW ஸ்டீயரிங் வீல், MINI கோ-கார்ட் உணர்வை தனிச்சிறப்புடன் சேர்க்கிறது.