ரூ. 34.90 லட்சம் ஆரம்ப விலையில் புதிய மினி கன்ட்ரிமேன் கார் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது கன்ட்ரிமேன் கார் பெட்ரோல் வேரியன்ட் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு வழங்கப்படுள்ளது.
புதிய மினி கன்ட்ரிமேன் கார்
2018 மினி கன்ட்ரிமேன் கார் முந்தைய மாடலை காட்டிலும் தோற்ற அமைப்பு உட்பட பல்வேறு கூடுநல் வசதிகள் கொண்டதாக வெளியாகியுள்ளது. இந்தியாவில் மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். கூப்பர் எஸ், கூப்பர் எஸ் ஜேசிடபிள்யூ மற்றும் கூப்பர் எஸ்டி (டீசல்) ஆகிய மூன்று மாடல்களில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
கூப்பர் S மற்றும் கூப்பர் JCW மாடல்களில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக விளங்குகின்றது.
கூப்பர் SD வேரியன்டில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 188 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்க ல்லது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் ஆல் வீல் டிரைவ் தேர்வில் கிடைத்து வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் 2 வீல் டிரைவ் ஆப்ஷனில் மட்டும் வழங்கப்படுகின்றது.
புதுப்பிக்கப்பட்ட கன்ட்ரிமேன் காரில் மேம்படுத்தப்பட்ட கிரில் பம்பர், எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் , இரட்டை பிரிவு புகைப்போக்கி என தொடர்ந்து தனது பாரம்பரிய தோற்றத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இன்டிரியரில் 8.8 அங்குல ஐ-ட்ரைவ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. டியூவல் ஸோன் ஆட்டோமேட்டிக் ஏர் கண்டிஷன் சிஸ்டம் என பல்வேறு அம்சங்களை பெற்று விளங்குகின்றது.
2018 மினி கண்ட்ரிமேன் விலை பட்டியல்
Petrol
Cooper S – ரூ. 34.9 லட்சம்
Cooper S JCW –ரூ. 44.4 லட்சம்
Diesel
Cooper SD – ரூ. 37.4 லட்சம்
(all prices, ex-showroom, India)