Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

by MR.Durai
8 August 2026, 1:13 pm
in Bike News
0
ShareTweetSend

ather konarc teased

ஏத்தர் நிறுவனத்தின் ரிஸ்டா மற்றும் 450 ஸ்கூட்டர்களை விட குறைந்த விலையில் எதிர்பார்க்கப்படுகின்ற கோனார்க் மின்சார ஸ்கூட்டரை புதிய EL பிளாட்ஃபார்த்தில் தயாரிக்கப்பட்டு வருவதனால் விலை ரூ.1 லட்சம் முதல் ரூ.1.20 லட்சத்துக்குள் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்பாக காட்சிப்படுத்தப்பட்ட EL கான்செப்ட் நிலைக்கு இணையாக தயாரிக்கப்பட உள்ள கோனார்க்கின் தொழில்நுட்ப வசதிகளைப் பொறுத்தவரை, புதிய ஸ்விங்ஆர்ம்-மவுண்டட் மோட்டார் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஸ்கூட்டரைப் பழுதுபார்ப்பதையும் பராமரிப்பதையும் எளிதாக்குவதுடன் நீண்ட சேவை இடைவெளிகளையும் உறுதி செய்கிறது. மேலும் ஹேண்டில்பாரில் பொருத்தப்பட்ட முகப்பு எல்இடி விளக்கு, முன் அப்ரானில் அமைந்த அகலமான எல்இடி விளக்குகள் மற்றும் முற்றிலும் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை இடம் பெறக்கூடும்.

முன்புறம் 14-இன்ச் பெரிய சக்கரமும் பின்புறம் 12-இன்ச் சக்கரமும் இடம்பெற்று பாதுகாப்பிற்காக முன்பக்கம் டிஸ்க் பிரேக்கும் பின்புறம் டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இருவர் வசதியாக அமர்ந்து செல்லும் வகையில் நீண்ட இருக்கையும் விசாலமான லெக்ரூம் இடவசதியும் இதில் வடிவமைக்கப்பட்டு சந்தையில் உள்ள டிவிஎஸ் ஐக்யூப், விடா VX2 மற்றும் பஜாஜ் சேத்தக் ஆகிய பிரபல மாடல்களுக்கு இந்த ஏத்தர் கோனார்க் மிகக் கடுமையான போட்டியைக் கொடுக்கும்.

வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஏத்தரின் சமூக தினத்தில் முழுமையான நுட்ப விபரங்கள் மற்றும் விலை வெளியாகும்.

ather konarc teased 1

 

Related Motor News

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

வெற்றிகரமாக 5 லட்சம் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியை கடந்த ஏதெர் எனர்ஜி

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்

ஏதெர் 450 ஏபெக்ஸ் ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரில் தொடுதிரை மற்றும் புதிய நிறங்கள்

Tags: Ather El01 ScooterAther EnergyAther Konarc
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Bajaj Pulsar N160 s and Bajaj Pulsar N160 ss

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் எலக்ட்ரிக் அறிமுகமானது

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan