Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது

By MR.Durai
Last updated: 16,December 2018
Share
SHARE

இந்தியர்களின் மிக பிரபலமான ஆஃப் ரோடு வாகனமாக விளங்குகின்ற மஹிந்திரா தார் எஸ்யூவி மாடலின் இரண்டாம் தலைமுறை மாடல் தயாராகி வருகின்றது.

முன்னணி யுட்டிலிட்டி ரக வாகன தயாரிப்பாளராக விளங்கும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற எஸ்யூவி ரக மாடல்களில் ஒன்றாக விளங்கும் ஆஃப் ரோடு மாடலான தார் எஸ்யூவி காரின் இரண்டாம் தலைமுறை மாடலின் சோதனை ஓட்ட பங்கள் மற்றும் முக்கிய விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

முதன்முறையாக 2010 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட தார் எஸ்யூவி ஆஃப் ரோடு விரும்பிகளுக்கு ஏற்ற வகையில் கஸ்டமைஸ் செய்வதனை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான வசதிகளை இணைப்பது வரை மஹிந்திரா பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வரும் நிலையில், நவீன தலைமுறையினர் விரும்பும் வகையில் புதிய பொலிவு மற்றும் நவீன வசதிகள் என பல்வேறு அம்சங்களை பெற்ற மாடலாக வெளியாக உள்ள புதிய தலைமுறை தார் எஸ்யூவி மாடலின் வடிவ மொழி வடிவமைப்பினை, இந்நிறுவனத்தின் கீழ் செயல்படும் மஹிந்திரா டிசைன், பினின்ஃபாரீனா மற்றும் சாங்யாங் ஆகிய நிறுவனங்களின் கூட்டு டிசைன் வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட உள்ளது.

தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற தார் காரானது முந்தைய தலைமுறை ஸ்கார்ப்பியோ மற்றும் பொலிரோ மாடல்களை பின்னணியாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உருவாகி வரும் புதிய தார் முந்தைய மாடலை காட்டிலும் அதி நவீன டிசைன் அம்சங்களுடன் கூடுதல் ஆஃப் ரோடு திறனை வெளிப்படுத்தும் நோக்கில் அமைந்திருக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

வருகின்ற 1 ஏப்ரல் 2020 முதல் மத்திய அரசு இரு சக்கர வாகனம் (2019 ஏப்ரல் 1 முதல்) மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பாதுகாப்பு சார்ந்த வசதிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க திட்டமிட்டுள்ளதால், புதிய தார் மாடல் பாரத் கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஏற்றப்படி வடிவமைக்கப்பட்டு இரட்டை காற்றுப்பை , ஏபிஎஸ் உள்ளிட்ட அடிப்படை அம்சங்க்களை கொண்டதாக வரக்கூடும்.

தார் எஸ்யூவி மாடலில் இடம்பெற்றுள்ள 2.5 லிட்டர் CRDe மற்றும் 2.5 லிட்டர் Di என்ஜினுக்கு மாற்றாக, பாரத் ஸ்டேஜ் 6 எனப்படும் பிஎஸ் 6 மாசு விதிமுறைக்கு உட்பட்ட 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கலாம். மேலும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் நிரந்தரமாக இடம்பெற்றிருப்பதுடன் புதிய லேடர் அடிச்சட்டத்தில் வடிவமைக்கப்பட்டு முந்தைய மாடலை விட கூடுதல் நீளம் மற்றம் அகலத்தை பெற்றிருக்க வாய்ப்புள்ளது.

சமீபத்தில் சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் முழுதும் மறைக்கப்பட்ட தார் எஸ்யூவி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த மாடல் தற்போது விற்பனையில் உள்ள தாரின் பாகங்களை பெரும்பாலும் கொண்டதாக அறியப்பட்டாலும், இது தொடக்க நிலை சோதனை ஓட்டம் என்பது தெரிய வருகின்றது.

விரைவில் இந்நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் ரக மஹிந்திரா எஸ்யூவி வெளியிடப்பட உள்ள நிலையில், சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் 2020 மஹிந்திரா தார் எஸ்யூவி, வரும் 2019 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2020 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் சந்தைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

renault kiger
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா
2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!
TAGGED:Mahindra SUVMahindra TharSUV
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
Royal Enfield goan classic 350 side
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு Goan கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்
Ather energy
2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
kawasaki w175 street
Kawasaki Bikes
கவாஸாகி W175 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
ஏதெர் ரிஸ்டா இ ஸ்கூட்டர்
Ather energy
ஏதெர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms