Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்

by MR.Durai
13 October 2019, 11:35 am
in Car News
0
ShareTweetSend

2020 hyundai creta

முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட வசதிகளை பெற்ற ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகமானது. 2020 ஆட்டோ எக்ஸ்போ மூலம் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ள இந்த மாடல் தற்பொழுது இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகின்றது. சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹூண்டாய் ix25 எஸ்யூவி இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா என்ற பெயரில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

பிரபலமான ஹூண்டாய் கிரெட்டா விற்பனைக்கு வந்தபிறகு இந்நிறுவனத்தின் யூட்டிலிட்டி வாகன சந்தை பன்மடங்கு உயர்ந்தது. குறிப்பாக கடந்த பிப்ரவரி மாத முடிவில் 5,00,000 அதிகமான கிரெட்டா கார்களை இந்தியாவில் மட்டும் விற்பனை செய்துள்ளது. சீனாவில் வெளியிடப்பட்ட மாடலின் தோற்ற உந்துதலை பின்பற்றியே இந்தியாவிலும் விற்பனைக்கு வரக்கூடும்.

ஐஎக்ஸ் 25 ஸ்டைல்

சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஐஎக்ஸ் 25 எஸ்யூவி மாடலின் தோற்ற அமைப்பு முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்டு ஹூண்டாயின் வென்யூ மற்றும் பிரபலமான பாலிசேட் உயர் ரக எஸ்யூவி கார்களுக்கு இணையான முகப்பு தோற்ற அமைப்பினை கொண்டுள்ளது. மிகவும் அகலமான ஹூண்டாய் கார் நிறுவனத்தின் பாரம்பரியமான கேஸ்கேடிங் கிரில் பளப்பளப்பான கருப்பு நிறத்துடன், ஸ்கிட் பிளேட் பக்கவாட்டு அமைப்பு மற்றும் முன் மற்றும் பின்புற பம்பர்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பிரபலமாக தொடங்கியுள்ள இரு பிரிவுகளை கொண்ட ஹெட்லைட் மேற்புறத்தில் எல்இடி ரன்னிங் விளக்குகள் கீழ் அமைப்பில் ஹெட்லைட் பெற்றுள்ளது. இரண்டு டர்ன் இன்டிகேட்டர்களை கொண்டுள்ளது. ஒன்று பனி விளக்கு அறையிலும் மற்றொன்று விங் மிரர் வாயிலாக கொண்டுள்ள இந்த எஸ்யூவியின் டெயில் லைட் மற்றும் இன்டிகேட்டர் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் உள்ள மாடலை விட 30 மிமீ நீளம் அதிகரிக்கப்பட்டு தற்பொழு 4,300 மிமீ நீளத்துடன் அகலம் 10 மிமீ அதிகரிக்கபட்டு 1,790 மிமீ பெற்றதாக இந்த எஸ்யூவி விளங்குகின்றது.

002f3 2020 hyundai creta

இன்டிரியர் அமைப்பு

விற்பனைக்கு கிடைக்கின்ற வென்யூ எஸ்யூவி காரில் உள்ள ப்ளூலிங்க் டெக்னாலாஜி பெற உள்ள கிரெட்டா காரில் சீன சந்தையில் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இதே போன்ற அமைப்பினை இந்தியாவிலும் இந்நிறுவனம் வழங்க வாய்ப்புகள் உள்ளது. இன்டிரியரின் டேஸ்போர்டு மற்றும் ஸ்டீயரிங் வீலில் சிறிய மாறங்ள் பெற்றிருக்கும். மேலும் இந்தியாவில் முதற்கட்டமாக 5 இருக்கை கொண்ட மாடலும் பிறகு 7 இருக்கை பெற்ற கிரெட்டா காரும் வெளியாகலாம்.

e5311 hyundai ix25 creta c6db6 2020 hyundai creta int

2020 கிரெட்டா என்ஜின்

கியா செல்டோஸ் காரில் இடம்பெற்றுள்ள பிஎஸ் 6 என்ஜின் ஆப்ஷன்களை அப்படியே க்ரெட்டா காரும் பெற உள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசலுக்கு மாற்றாக புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பெற்றிருக்கும். அடுத்தப்படியாக கூடுதலாக  1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினும் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியில் முதன்முறையாக இந்திய சந்தைக்கு புதிய ஹூண்டாய் கிரெட்டா வெளியாகலாம். இந்த காரின் விலை தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலை விட கூடுதலாக அமைந்திருக்கும்.  கிரெட்டா காருக்கு போட்டியாக புதிய எஸ்யூவியும் கியா செல்டோஸ், எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி 500, ரெனால்ட் கேப்டூர் மற்றும் நிசான் கிக்ஸ் போன்றவற்றிலிருந்து இந்திய சந்தையில் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும்.

4b9e5 2020 hyundai creta fr 002f3 2020 hyundai creta daeb1 2020 hyundai creta rearimage source – autohome.com.cn

Related Motor News

அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டா..!

ஏப்ரல் 2025ல் ஹூண்டாய் கார்களின் விலையை 3% வரை உயருகின்றது

2025 க்ரெட்டா காரில் முக்கிய மாற்றங்களை தந்த ஹூண்டாய்.!

ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்புகள்.!

ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் எஸ்யூவி முக்கிய சிறப்புகள்.!

473 கிமீ ரேஞ்ச்.., க்ரெட்டா எலெக்ட்ரிக் காரை வெளியிட்ட ஹூண்டாய்

Tags: Hyundai Creta
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

new BMW 2 Series Gran Coupe

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

மஹிந்திரா XUV 3XO REVX

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

10,000 முன்பதிவுகளை கடந்த டாடா ஹாரியர்.EV உற்பத்தி துவங்கியது

490Km ரேஞ்ச் வழங்கும் கியா காரன்ஸ் கிளாவிஸ் EV ஜூலை 15ல் அறிமுகம்

பாரத் NCAPல் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

ஆகஸ்ட் 15ல் மஹிந்திரா எஸ்யூவிகள் மற்றும் புதிய பிளாட்ஃபாரம் அறிமுகமாகிறது

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

அடுத்த செய்திகள்

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

new BMW 2 Series Gran Coupe

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

KTM 390 அட்வென்ச்சர் X

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X விற்பனைக்கு வந்தது

helmet certifications uses

ISI, DOT, ECE, SHARP, SNELL, FIM சான்றிதழ்., எந்த ஹெல்மெட் வாங்கலாம்.?

hyundai creta electric

2025 ஜூன் மாத விற்பனையில் 25 இடங்களை பிடித்த கார்கள், எஸ்யூவிகள்

பஜாஜ் பல்சர் ns400z பைக்

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan