Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

பெனெல்லி இம்பீரியல் 400 சிறப்பு பார்வை

By MR.Durai
Last updated: 8,December 2019
Share
SHARE

benelli IMPERIALE 400

பெனெல்லி நிறுவனத்தின் ரெட்ரோ ஸ்டைல் மாடலாக வந்துள்ள இம்பீரியல் 400 மாடல் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மற்றும் ஜாவா பைக் மாடல்களுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தற்போது வரை 4,000க்கு அதிகமான முன்பதிவுகளை பெற்று அசத்தியுள்ளது.

என்ஃபீல்டு கிளாசிக் மாடலில் 80 கிமீ மேற்பட்ட வேகத்தில் அதிரவைக்கின்ற அதிர்வுகள் இன்றி பெனெல்லி இம்பீரியல் 400 அமைந்திருப்பது மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. மற்றபடி நேர்த்தியான ஸ்டைலிங் அம்சங்கள் கிளாசிக் மற்றும் ஜாவா மாடலுக்கு இணையாகவே அமைந்துள்ளது.

புதிய தலைமுறை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மாடல்கள் அடுத்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் புதிய என்ஜின் உடன் வெளியாகலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு முன்பாகவே பிஎஸ்6 தற்போது விற்பனையில் உள்ள என்ஜின் மாடலின் அடிப்படையில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

இம்பீரியல் 400 மாடலில் 373.5 சிசி ஒற்றை சிலிண்டர் SOHC என்ஜினை பெற்றிருக்கின்றது. இந்த என்ஜின் 19 பிஹெச்பி அதிகபட்ச சக்தியையும் 28 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. 5 வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இம்பீரியல் 400 பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பரினை பெற்று வருகிறது. இரட்டை சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்ட இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது.

Benelli Imperiale 400

சிவப்பு, கருப்பு மற்றும் சில்வர் என மூன்று நிறங்களில் வரவுள்ள இந்த மாடலில் முன்புறத்தில் வட்ட வடிவ ஹெட்லைட், வட்ட வடிவத்திலான இன்டிகேட்டர், க்ரோம் பூச்சு பெற்ற ஃபென்டர், ஸ்போக்டூ வீல் உட்பட ட்வீன் பாட் கொண்ட இண்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரை பெற உள்ளது.

பெனெல்லி இம்பீரியல் 400 மாடலின் மைலேஜ் பொறுத்தவரை லிட்டருக்கு நெடுஞ்சாலையில் 34 – 35 கிமீ வரை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. அதுவே நகரங்களில் லிட்டருக்கு 32-33  கிமீ கிடைக்க வாய்ப்பு உள்ளது.

போட்டியாளர்களில் ஜாவா மாடல் சற்று அதிகமாக மைலேஜ் லிட்டருக்கு 42 கிமீ வரையும், கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மைலேஜ் லிட்டருக்கு 38-40 கிமீ கிடைக்கலாம்.

benelli-IMPERIALE-400

இந்த பைக்கிற்கு 3 வருட வாரண்டி அல்லது வரம்பற்ற கிமீ வாரண்டி வழங்கப்படுகின்றது. கூடுதலாக இரண்டு வருட இலவச சர்வீஸ் வழங்கப்பட உள்ளது.

இந்தியாவில் பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் விலை ரூ.1.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. போட்டியாளர்களான ஜாவா மாடல் ரூ. 1.64 லட்சம் மற்றும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ரூ.1.45 லட்சம் முதல் ரூ.1.54 லட்சம் வரை கிடைக்கின்றது.

மேலும் படிங்க – பெனெல்லி இம்பீரியல் 400 Vs ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 Vs ஜாவா

tvs raider 125 deadpool
டெட்பூல் மற்றும் வால்வரின் டிசைனில் டிவிஎஸ் ரைடர் 125 வெளியானது
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
TAGGED:Benelli imperiale 400
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
honda sp160 price
Honda Bikes
ஹோண்டா எஸ்பி 160 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்
Ather energy
2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 yamaha rayzr 125 fi hybrid
Yamaha
யமஹா ரே ZR 125 & ரே ZR 125 ஸ்டீரிட் ரேலி ஸ்கூட்டர் விலை, மைலேஜ், நிறம்,
hero splendor plus xtec disc brake
Hero Motocorp
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் விலை, மைலேஜ், நிறம் , சிறப்பம்சங்கள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms