புதிதாக விற்பனைக்கு வந்துள்ள க்ரூஸர் ஸ்டைல் ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கின் போட்டியாளர்களான ஹோண்டா ஹைனெஸ் சிபி 350, ஜாவா, ஜாவா 42 மற்றும் பெனெல்லி இம்பீரியல் 400 பைக்குடன் ஒப்பீட்டு சிறப்புகளை அறிந்து கொள்ளலாம்.
மிக நீண்ட காத்திருப்புக்கு பின்னர் வெளியிடப்பட்டுள்ள மீட்டியோர் 350 பைக்கில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் புதிய 350 சிசி இன்ஜின் கொடுக்கப்பட்டு நவீனத்துவமான டிரிப்பர் நேவிகேஷன், டூயல் டோன் கலர் என கவர்ச்சிகரமாக அமைந்துள்ளது.
{
“@context”: “https://schema.org”,
“@type”: “FAQPage”,
“mainEntity”: [
{
“@type”: “Question”,
“name”: “ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கின் போட்டியாளர்கள் யார் ?”,
“acceptedAnswer”: {
“@type”: “Answer”,
“text”: “இந்திய சந்தையில் மீட்டியோர் 350 பைக்கிற்கு சவாலாக ஹைனெஸ் சிபி 350, ஜாவா, ஜாவா 42 மற்றும் பெனெல்லி இம்பீரியல் 400 ஆகியவை உள்ளது.”
}
}
]
}
மீட்டியோர் 350 இன்ஜின் உடன் போட்டியாளர்கள்
முந்தைய பழைய புஸ் ராடு வகை இன்ஜினுக்கு விடை கொடுத்துள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 349சிசி ஏர் ஆயில் கூல்டு இன்ஜினை SOHC முறையில் வடிவமைத்து அதிகபட்சமாக 20.2 பிஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க்கினை வெளிப்படுத்துகின்றது.
மீட்டியோர் 350 | ஹைனெஸ் சிபி 350 | இம்பீரியல் 400 | ஜாவா/ஜாவா 42 | |
Engine | 349cc, single-cylinder, air-oil cooled | 348.36cc, single-cylinder, air-cooled | 374cc, single-cylinder, air-cooled | 293cc, single-cylinder, liquid-cooled |
Power | 20.2hp at 6,100rpm | 21.1hp at 5500rpm | 21hp at 6000rpm | 26.5hp |
Torque | 27Nm at 4,000rpm | 30Nm at 3000rpm | 29Nm at 3500rpm | 27.05Nm |
Power-to-weight ratio | 105.75hp/tonne | 116.57hp/tonne | 102.43hp/tonne | 154.06hp/tonne |
Gearbox | 5-speed | 5-speed | 5-speed | 6-speed |
ரெட்ரோ ஸ்டைல் மாடல்களில் அதிகபட்ச பவரையும் 6 வேக கியர்பாக்ஸூம் ஜாவா பைக்குகள் கொண்டுள்ளது. புதிய மீட்டியோர் இன்ஜின் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் க்ரூஸிங் அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
வசதிகள் மற்றும் சிறப்புகள்
முந்தைய மாடலை விட மிக சிறப்பான டபுள் கார்டிள் ஃபிரேம், 20 லிட்டருக்கு பதிலாக 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க், இரு பக்க டயர்களில் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மீட்டியர் 350 பைக்கின் எடை 6 கிலோ வரை குறைந்துள்ளது.
மீட்டியோர் 350 | ஹைனெஸ் சிபி 350 | இம்பீரியல் 400 | ஜாவா/ஜாவா 42 | |
Weight (kerb) | 191kg | 181kg | 205kg | 172kg |
Ground clearance | 170mm | 166mm | 165mm | — |
Wheelbase | 1400mm | 1441mm | 1440mm | 1369mm |
Brakes (f) | 300mm டிஸ்க் | 310mm டிஸ்க் | 300mm டிஸ்க் | 280mm டிஸ்க் |
Brakes (r) | 270mm டிஸ்க் | 240mm டிஸ்க் | 240mm டிஸ்க் | 153mm டிரம் / 240mm டிஸ்க் |
Suspension (f) | Telescopic fork | Telescopic fork | Telescopic fork | Telescopic fork |
Suspension (r) | Twin shock absorbers | Twin shock absorbers | Twin shock absorbers | Twin shock absorbers |
Tyres (f) | 100/90-19 | 100/90-19 | 100/90-19 | 90/90-18 |
Tyres (r) | 140/70-17 | 130/70-18 | 130/80-18 | 120/80-17 |
Fuel capacity | 15 லிட்டர் | 15 லிட்டர் | 12 லிட்டர் | 14 லிட்டர் |
இந்த பிரிவில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி மூலமாக டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதியை மீட்டியோர் 350 மற்றும் ஹைனெஸ் சிபி 350 பைக்குகள் பெறுகின்றது. ஹோண்டா செலக்டபிள் டார்க்யூ கன்ட்ரோல் சிஸ்டத்தை வழங்கியுள்ளது. மற்றபடி டாப் வேரியண்ட் DLX pro வில் மட்டும் நேவிகேஷன் வசதி கொடுத்துள்ளது. ஆனால் ராயல் என்ஃபீல்டு மீட்டியோரின் அனைத்து வேரியண்டிலும் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் அம்சத்தை கொண்டுள்ளது.
மீட்டியோர் 350 விலை ஒப்பீடு
போட்டியாளர்களை விட மிக சவாலான விலையில் கொண்டு வரப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கில் அதிர்வுகள் இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ள இன்ஜின் மிக சிறப்பான முறையில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட இருக்கைகள், டூயல் டோன் நிறத்தை பெற்றுள்ளது. முந்தைய தண்டர்பேர்டு மாடலை விட மிக சிறப்பானதாகவும், ராயல் என்ஃபீல்டு ரசிகர்கள் மற்றும் புதிதாக வாங்குபவர்களுக்கு மிக சிறப்பான சாய்ஸாக அமைந்துள்ளது.
மீட்டியர் 350 | ஹைனெஸ் சிபி 350 | இம்பீரியல் 400 | ஜாவா/ஜாவா 42 | |
விலை (ஷோரூம்) | ரூ. 1.76-1.90 லட்சம் | ரூ. 1.85-1.90 லட்சம் | ரூ. 1.99-2.11 லட்சம் | ரூ. 1.65-1.83 லட்சம் |