பெனெல்லி இந்தியா நிறுவனம், ஜனவரி 2020 முதல் மாதந்தோறும் ஒரு மோட்டார் சைக்கிள் என்ற வீதத்தில் மொத்தமாக ஏழு முதல் எட்டு மாதங்களுக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆகஸ்ட் மாதத்திற்குள் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கின்றது. தற்போது இந்நிறுவனம் இம்பீரியல் 400 என்ற கிளாசிக் ஸ்டைல் மாடல் மட்டுமே பிஎஸ்-6 முறையில் விற்பனை செய்து வருகின்றது. ஆனால் இந்நிறுவனம் எந்தெந்த மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரும் என்பது பற்றி எந்த உறுதியான தகவலும் இல்லை.

முன்பாக விற்பனை செய்யப்பட்ட மாடல்களின் அடிப்படையில், இந்தியாவில் பெனெல்லி TRK 502, TRK 502X, லியோன்சினோ 500, லியோன்சினோ 250, TNT 600i, 302S மற்றும் 302R ஆகியவற்றை வெளியிடலாம்.