Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

₹ 86,900 விலையில் ஹோண்டா டியோ 125 விற்பனைக்கு வந்தது

by MR.Durai
13 July 2023, 1:35 pm
in Bike News
0
ShareTweetSend

Honda Dio 125 price

டியோ 110 அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு ₹ 86,900 முதல்  ₹ 94,800 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  Std மற்றும் ஸ்மார்ட் என இரு விதமான வேரியண்டுகள் கிடைக்கின்றது.

விற்பனையில் உள்ள கிரேஸியா ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கின்ற 125சிசி என்ஜின் பெற்றதாக அறிமுகம் செய்யபட்டுள்ள டியோ ஸ்கூட்டர் மிக ஸ்டைலிஷான அமைப்பினை கொண்டுள்ளது.

Honda Dio 125

டியோ 125  ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள OBD2 மற்றும் இ20 எரிபொருளுக்கு இணக்கமான, 125cc, ஒற்றை சிலிண்டர், eSP (மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பவர்) கொண்ட ஏர் கூல்டு இன்ஜின் பெற்று ஹோண்டா ஏசிஜி ஸ்டார்டர், மேம்படுத்தப்பட்ட டம்பிள் ஃப்ளோ, உராய்வு குறைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட எரிப்பு மற்றும் சோலனாய்டு வால்வுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா டியோ 125 மாடலில் பொருத்தியுள்ள 123.92cc இன்ஜின் பவர் 8.16bhp at 6250 rpm மற்றும் 10.4Nm டார்க் at 5000 rpm வழங்கி வருகின்றது.

dio 125

முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு பல்வேறு மேம்பட்ட தகவல் கிடைக்கின்றது. பெட்ரோல் இருப்பின் அளவு, சராசரி எரிபொருள் மைலேஜ் & நிகழ்நேரத்தில் கிடைக்கின்ற மைலேஜ் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். ட்ரிப் மீட்டர், கடிகாரம், சைட் ஸ்டாண்ட் இண்டிகேட்டர், ஸ்மார்ட் கீ & பேட்டரி இண்டிகேட்டர், ஈக்கோ இண்டிகேட்டர் மற்றும் சர்வீஸ் இண்டிகேட்டர் போன்ற விவரங்களை மீட்டர் காட்டுகிறது.

ஹெச்-ஸ்மார்ட் எனப்படுகின்ற அம்சத்தின் மூலம், ஸ்மார்ட் ஃபைண்ட் – ஸ்கூட்டரை கண்டுபிடிக்கும் வகையில் நான்கு இண்டிகேட்டர்களும்  ஒளிரும், ஸ்கூட்டரிலிருந்து 10 மீட்டருக்குள் இருந்தால், வாகனத்தின் இருப்பிடத்தை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

ஸ்மார்ட் அன்லாக் –  ஸ்கூட்டரிலிருந்து இரண்டு மீட்டருக்குள் இருந்தால், கைப்பிடியை லாக் திறக்கலாம், மேலும் பெட்ரோல் டேங்க் மூடி மற்றும் இருக்கையையும் திறக்கலாம்.

ஸ்மார்ட் சேஃப் – ஸ்கூட்டரில் இருந்து இரண்டு மீட்டருக்குள் இருப்பதால் உங்கள் ஸ்கூட்டரை இயக்கலாம். தூரம் அதிகரிக்கும் பொழுது ஸ்கூட்டர் தானாகவே பூட்டிக் கொள்ளும், ஒருவேளை ஸ்கூட்டரை லாக் செய்ய வேண்டும் என்றால் மூன்று வினாடிகளுக்கு பொத்தானை அழுத்துவதன் மூலம் இந்த அம்சத்தையும் செயல்படுத்தலாம்.

ஸ்மார்ட் ஸ்டார்ட் –  கீ இல்லாமல் ஆக்டிவா 125 ஸ்கூட்டரை ஆன் செய்ய, ஸ்டார்ட் பட்டனை அழுத்தினால் போதும்.

டியோ 125 ஸ்கூட்டர் ரேட்

டியோ மோட்டோ ஸ்கூட்டர் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு  ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம்  கொண்டு, டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனுடன் 12-இன்ச் முன் சக்கரத்துடன்,  ஸ்டைலான தோற்றத்தையும் கரடுமுரடான சாலைகளில் சுமூகமான பயணிக்க கிரவுண்ட் கிளியரன்ஸ் 171 மிமீ பெற்றுள்ளது.

ஹோண்டா டியோ 125 ஸ்டாண்டர்ட் வேரியண்டின் விலை ரூ. 86,900, மற்றும் ஸ்மார்ட் வேரியண்ட் ரூ.94,800 (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு) ஆகும்.

 

ஹோண்டா டியோ 125 புகைப்படங்கள்

Honda Dio 125 Launched
dio 125
டியோ 125 ஸ்கூட்டர் ரேட்
Honda Dio 125 price
Honda Dio 125 blue
Honda Dio 125 Mat Sangria Red Metallic
Honda Dio 125 Mat Axis Gray Metallic

புதிய டியோ 125 ஸ்கூட்டரில் HMSI நிறுவனம் 10 ஆண்டு உத்தரவாதத் தொகுப்பை (3 ஆண்டுகள் + 7 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம்) வழங்குகிறது. பேரல் சைரன் நீலம், கிரே, நைட் ஸ்டார் பிளாக், ப்ளூ மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், மேட் சங்ரியா ரெட் மெட்டாலிக் & ஸ்போர்ட்ஸ் ரெட் என 7 விதமான வண்ண விருப்பங்கள் இரண்டு வகைகளிலும் கிடைக்கும்.

Related Motor News

2023 நவம்பரில் ஹோண்டா 2 வீலர்ஸ் விற்பனை 20 % உயர்வு

ஹோண்டா ஹார்னெட் மற்றும் டியோ 125 ரெப்சால் எடிசன் விற்பனைக்கு வெளியானது

டியோ 125 வருகை எதிரொலி.! கிரேசியா 125 ஸ்கூட்டரை நீக்கிய ஹோண்டா

ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் வசதிகள்

ஹோண்டா டியோ 125 Vs டியோ 110 ஒப்பீடு எந்த ஸ்கூட்டர் வாங்கலாம்

ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் விலை ஒப்பீடு

Tags: Honda Dio 125
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

KTM 390 அட்வென்ச்சர் X

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X+ விற்பனைக்கு வந்தது

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

ரூ.44,990 விலையில் விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா..!

2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 விற்பனைக்கு வெளியானது

புதிய வசதிகளுடன் 2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 டீசர் வெளியானது

புதிய ஐக்யூப் 3.1 வேரியண்டை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

கூடுதலாக ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டரில் S 3.7Kwh வேரியண்ட் வெளியானது

யமஹா ரேஇசட்ஆர் 125 ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு ரூ.10,010 வரை தள்ளுபடி சலுகை.!

அடுத்த செய்திகள்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

டெஸ்லா

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

new BMW 2 Series Gran Coupe

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

KTM 390 அட்வென்ச்சர் X

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X+ விற்பனைக்கு வந்தது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan