ஹோண்டா வெளியிட்டுள்ள புதிய டியோ 125 ஸ்கூட்டர் மாடலுக்கு இந்திய சந்தையில் நேரடியான போட்டியை 125cc பிரிவில் டிவிஎஸ் என்டார்க், சுசூகி அவெனிஸ், யமஹா ரே இசட்ஆர் மற்றும் ஸ்டீரிட் ரேலி, மற்றும் ஏப்ரிலியா SR 125 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.
மற்றபடி, 125சிசி சந்தையில் பிரபலமான ஆக்சஸ் 125, ஜூபிடர் 125, மேஸ்ட்ரோ எட்ஜ் 125, டெஸ்டினி 125, ஃபேசினோ 125 மற்றும் ஆக்டிவா 125 என பல்வேறு மாடல்கள் கிடைக்கின்றன. இங்கே ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற ஸ்கூட்டர் மாடல்களை மட்டும் ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம்.
Honda Dio 125 Vs Rivals Price comparison
125சிசி பிரிவில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்ற மாடலாக விளங்கும் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டருக்கு சவால் விடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள டியோ 125 பெரிய அளவில் தோற்ற அமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் டியோ 110 போலவே அமைந்துள்ளது.
முதலில் நான்கு மாடல்களுடன் என்ஜின் விபரத்தை ஒப்பீடு செய்து அட்டவனையில் விபரத்தை காணலாம். பொதுவாக அனைத்து மாடல்களும் ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் பெற்று சிவிடி கியர்பாக்ஸ் கொண்டதாகும்.
ஸ்போர்ட்டிவ் ஸ்கூட்டர் பிரிவில் சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தும் மாடல்களில் ஏப்ரிலியா எஸ்ஆர் 125 மற்றும் டிவிஎஸ் என்டார்க் 125 மாடல்களை தொடர்ந்து மற்றவை உள்ளது.
தயாரிப்பாளர் | என்ஜின் பவர், டார்க் |
Honda Dio 125 | 123.92cc, 8.16 bhp at 6250 rpm
10.4 Nm at 5000 rpm |
TVS Ntorq 125 | 124.8cc, 9.25 bhp at 7000 rpm
10.4 Nm at 5000 rpm |
Suzuki Avenis | 124.3cc, 8.58 bhp at 6750 rpm
10 Nm at 5500 rpm |
Yamaha Ray ZR 125/
Street Rally |
125cc, 8.04 bhp at 6500 rpm
10.3 Nm at 5000 rpm |
Aprilia SR 125 | 124.45cc, 9.97 bhp at 7300 rpm
10.33 Nm at 5500 rpm |
டியோ 125 விலை ஒப்பீடு செய்தல் அட்டவனையில் காணலாம். (தமிழ்நாடு விலை பட்டியல்) வழங்கப்பட்டுள்ள ஆன்-ரோடு விலை தோராயமானது, இதில் கூடுதல் ஆக்செரீஸ், டீலர்களை பொறுத்து விலை மாறுபடும்.
தயாரிப்பாளர் | விலை (எக்ஸ்-ஷோரூம்) | ஆன்-ரோடு விலை |
Honda Dio 125 | ₹ 86,900 – ₹ 94,800 | ₹ 1,02,457 – ₹ 1,11,675 |
TVS Ntorq 125 | ₹ 88,715 – ₹ 1,09,820 | ₹ 1,05,594 – ₹ 1,28,792 |
Suzuki Avenis | ₹ 92,035 – ₹ 96,236 | ₹ 1,10,456 – ₹ 1,14,670 |
Yamaha Ray ZR 125 | ₹ 85,510 – ₹ 96,210 | ₹ 1,04,560 – ₹ 1,17,705 |
Aprilia SR 125 | ₹ 1,25,170 | ₹ 1,45,070 |