டியோ 110 அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு ₹ 86,900 முதல் ₹ 94,800 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Std மற்றும் ஸ்மார்ட் என இரு விதமான வேரியண்டுகள் கிடைக்கின்றது.
விற்பனையில் உள்ள கிரேஸியா ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கின்ற 125சிசி என்ஜின் பெற்றதாக அறிமுகம் செய்யபட்டுள்ள டியோ ஸ்கூட்டர் மிக ஸ்டைலிஷான அமைப்பினை கொண்டுள்ளது.
Honda Dio 125
டியோ 125 ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள OBD2 மற்றும் இ20 எரிபொருளுக்கு இணக்கமான, 125cc, ஒற்றை சிலிண்டர், eSP (மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பவர்) கொண்ட ஏர் கூல்டு இன்ஜின் பெற்று ஹோண்டா ஏசிஜி ஸ்டார்டர், மேம்படுத்தப்பட்ட டம்பிள் ஃப்ளோ, உராய்வு குறைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட எரிப்பு மற்றும் சோலனாய்டு வால்வுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா டியோ 125 மாடலில் பொருத்தியுள்ள 123.92cc இன்ஜின் பவர் 8.16bhp at 6250 rpm மற்றும் 10.4Nm டார்க் at 5000 rpm வழங்கி வருகின்றது.
முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு பல்வேறு மேம்பட்ட தகவல் கிடைக்கின்றது. பெட்ரோல் இருப்பின் அளவு, சராசரி எரிபொருள் மைலேஜ் & நிகழ்நேரத்தில் கிடைக்கின்ற மைலேஜ் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். ட்ரிப் மீட்டர், கடிகாரம், சைட் ஸ்டாண்ட் இண்டிகேட்டர், ஸ்மார்ட் கீ & பேட்டரி இண்டிகேட்டர், ஈக்கோ இண்டிகேட்டர் மற்றும் சர்வீஸ் இண்டிகேட்டர் போன்ற விவரங்களை மீட்டர் காட்டுகிறது.
ஹெச்-ஸ்மார்ட் எனப்படுகின்ற அம்சத்தின் மூலம், ஸ்மார்ட் ஃபைண்ட் – ஸ்கூட்டரை கண்டுபிடிக்கும் வகையில் நான்கு இண்டிகேட்டர்களும் ஒளிரும், ஸ்கூட்டரிலிருந்து 10 மீட்டருக்குள் இருந்தால், வாகனத்தின் இருப்பிடத்தை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
ஸ்மார்ட் அன்லாக் – ஸ்கூட்டரிலிருந்து இரண்டு மீட்டருக்குள் இருந்தால், கைப்பிடியை லாக் திறக்கலாம், மேலும் பெட்ரோல் டேங்க் மூடி மற்றும் இருக்கையையும் திறக்கலாம்.
ஸ்மார்ட் சேஃப் – ஸ்கூட்டரில் இருந்து இரண்டு மீட்டருக்குள் இருப்பதால் உங்கள் ஸ்கூட்டரை இயக்கலாம். தூரம் அதிகரிக்கும் பொழுது ஸ்கூட்டர் தானாகவே பூட்டிக் கொள்ளும், ஒருவேளை ஸ்கூட்டரை லாக் செய்ய வேண்டும் என்றால் மூன்று வினாடிகளுக்கு பொத்தானை அழுத்துவதன் மூலம் இந்த அம்சத்தையும் செயல்படுத்தலாம்.
ஸ்மார்ட் ஸ்டார்ட் – கீ இல்லாமல் ஆக்டிவா 125 ஸ்கூட்டரை ஆன் செய்ய, ஸ்டார்ட் பட்டனை அழுத்தினால் போதும்.
டியோ மோட்டோ ஸ்கூட்டர் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் கொண்டு, டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனுடன் 12-இன்ச் முன் சக்கரத்துடன், ஸ்டைலான தோற்றத்தையும் கரடுமுரடான சாலைகளில் சுமூகமான பயணிக்க கிரவுண்ட் கிளியரன்ஸ் 171 மிமீ பெற்றுள்ளது.
ஹோண்டா டியோ 125 ஸ்டாண்டர்ட் வேரியண்டின் விலை ரூ. 86,900, மற்றும் ஸ்மார்ட் வேரியண்ட் ரூ.94,800 (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு) ஆகும்.
ஹோண்டா டியோ 125 புகைப்படங்கள்
புதிய டியோ 125 ஸ்கூட்டரில் HMSI நிறுவனம் 10 ஆண்டு உத்தரவாதத் தொகுப்பை (3 ஆண்டுகள் + 7 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம்) வழங்குகிறது. பேரல் சைரன் நீலம், கிரே, நைட் ஸ்டார் பிளாக், ப்ளூ மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், மேட் சங்ரியா ரெட் மெட்டாலிக் & ஸ்போர்ட்ஸ் ரெட் என 7 விதமான வண்ண விருப்பங்கள் இரண்டு வகைகளிலும் கிடைக்கும்.